Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாஸ்டர் வரவேற்பு, வசூல் - ஓடிடி நிறுவனங்களுக்குப் பின்னடைவு

24 ஜன, 2021 - 09:52 IST
எழுத்தின் அளவு:
Due-to-Master-set-back-for-OTT

கொரோனா தொற்று பரவிய கடந்த வருட மார்ச் மாதம் தியேட்டர்கள் மூடப்பட்டன. பொழுதுபோக்கிற்காக தியேட்டர்களுக்குச் சென்று திரைப்படங்களைப் பார்த்து ரசித்த மக்களுக்கு மாற்றாக அமைந்தது ஓடிடி தளங்கள்.

பார்க்காமல் விட்ட சில புதிய படங்கள், மீண்டும் பார்க்க நினைத்த பழைய படங்கள், வேறு மொழிகளில் ஹிட்டான படங்கள் என அனைத்தையும் பார்க்க ஆரம்பித்தார்கள். திடீரென ஓடிடி தளங்களுக்கு வரவேற்பு கிடைக்க அதைத் தக்க வைக்க அந்த நிறுவனங்கள் முயற்சி செய்தன.

தியேட்டர்கள் திறக்கப்படாத காரணத்தால் புதிய படங்களையே நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் அவர்கள் வெளியிட்ட சில படங்களுக்கு வரவேற்பே கிடைக்கவில்லை. சமூக வலைத்தளங்களிலும் ஓடிடி வெளியீடுகளைக் கிண்டலடிக்க ஆரம்பித்தார்கள்.



அந்தக் கிண்டல் அதிகமாவதற்குள் தீபாவளியை முன்னிட்டு சூரரைப் போற்று, மூக்குத்தி அம்மன் ஆகிய இரண்டு படங்கள் நேரடியாக வெளிவந்து அவர்களைக் காப்பாற்றியது. இரண்டு படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அப்படியே மாஸ்டர் படத்தையும் மல்லுக்கட்டி இழுத்து வந்துவிடலாம் என நினைத்தார்கள். ஆனால், மணந்தால் மகாதேவி, இல்லையேல் மரணதேவி என்ற கணக்காக தியேட்டர்களில் மட்டும்தான் வெளியீடு என அதன் தயாரிப்பாளர்கள் முடிவெடுத்தார்கள்.

கொரோனா பயத்தை மீறி 50 சதவீத இருக்கைகளுக்கு மக்கள் வருவார்களா என்ற சந்தேகமும் எழுந்தது. ஆனால், அதையெல்லாம் மீறி முன்பதிவிலேயே படத்தை பார்க்க நாங்கள் ரெடி என ஒரு வாரத்திற்கு முன்பதிவு செய்தார்கள் ரசிகர்கள். மாஸ்டர் படத்திற்கான வசூல் 200 கோடியைத் தாண்டிப் போய்க் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட வசூல் ஓடிடி தளங்களக்கு ஒரு பின்னடைவாக அமைந்துவிட்டது.



இதற்கடுத்து கார்த்தி நடித்துள்ள சுல்தான், விஷால் நடித்துள்ள சக்ரா உள்ளிட்ட சில படங்களை ஓடிடிக்கு இழுக்க முயற்சித்தார்கள். பேச்சு வார்த்தைகளும் முடிந்துவிட்டதாகச் சொன்ன நிலையில் அதன் தயாரிப்பாளர்கள் படத்தைத் தியேட்டர்களில் வெளியிடும் முடிவுக்கு வந்துவிட்டார்களாம். மேலும், பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட வேறு சில முன்னணி நடிகர்களின் படங்களையும் தியேட்டர்களிலேயே வெளியிடத் தயாராகி வருகிறார்களாம்.

ஓடிடி தளங்களுக்கு தீபாவளிக்குக் கை கொடுத்த படங்கள் பொங்கலுக்கு காலை வாரிவிட்டுவிட்டன. பொங்கலை முன்னிட்டு வெளியான மாதவன் நடித்த மாறா, ஜெயம் ரவி நடித்த பூமி ஆகிய படங்கள் ரசிகர்களின் பொறுமையை சோதித்ததும் ஒரு காரணமாகிவிட்டது.

கடந்த மார்ச் மாதம் ஓடிடி தளங்களில் ஒரு வருடத்திற்கு உறுப்பினராகச் சேர்ந்த பலர், அடுத்த வருடத்திற்கான புதுப்பித்தலை செய்யத் தயங்குவார்கள். எனவே, தங்களுக்குக் கிடைத்த உறுப்பினர்களைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள ஓடிடி தளங்கள் எப்படியாவது புதிய படங்களை வெளியிட தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
'கேஜிஎப் 2' - லாபத்தில் பங்கு பெறும் யாஷ்'கேஜிஎப் 2' - லாபத்தில் பங்கு பெறும் ... அழகான மணமகளுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி : ராதிகா அழகான மணமகளுடன் பணியாற்றுவதில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

SAGAYA GNANA SUNDAR S - TIRUVNNAMALAI,இந்தியா
24 ஜன, 2021 - 23:58 Report Abuse
SAGAYA GNANA SUNDAR S என்னை போன்ற ரசிகர்கள் திரையரங்குகளில் படம் பார்க்க வேண்டும் என்றுதான் விரும்புவோம். அது பெரிய நடிகர்கள் படமோ சின்ன நடிகர்கள் படமோ நல்ல சினிமாவை ரசித்து கண்டுகளிக்க வேண்டும் என்றால் அது திரையரங்குகளில் மட்டுமே சாத்தியம்.
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
24 ஜன, 2021 - 18:04 Report Abuse
Mirthika Sathiamoorthi இங்கே திரையரங்கில் கூட்டம் அப்படின்னு சொல்லிட்டு அந்தப்பக்கம் OTT இல் மொக்க படங்களின் வெளியீடு அப்டின்னு சொல்றப்பவே தெரியல? உதாரணத்துக்கு மாற மற்றும் பூமி தெரியாம கேக்குறேன் இவைகள் தியேட்டரில் வெளியேறி இருந்தால் அப்பாவும் தெயட்டரில் கூட்டம் அல்லியிருக்குமா? கோவிட் இல்லாத நல்ல நாளிலே வருடத்துக்கு 200 க்குமேல் படங்கள் வெளிவருவதும் அதில் வெறும் 20 படங்கள் மட்டுமே வெற்றிபெறும் நிலையில்...இனி தியேட்டரில் கூட்டம் வரும்ன்னு சொல்றது சிரிப்பு சிரிப்பா இருக்கு...ஐம்பது சதம் இருக்கை இருநூறு கோடி வசூல்?..அப்போ நூறு சதம்ன்னா 400 கோடி வசூலா? ஹிந்தியில் பிளாப் கேரளாவில் தியேட்டர் திறக்கலை வெளிநாடுகளில் திரையரங்குகள் மோசமான நிலை, தெலுங்கில் ஒரளவு வெற்றி பின் இருநூறு கோடி? தமிழகத்தில் மட்டும் ...அப்போ அதிகப்படியான காட்சிகள் இல்லைன்னா அதிகவிலைக்கு டிக்கெட் விற்கப்பட்டுள்ளது சரிதானே? OTT இல் வெளியிடும்போது இந்த அநியாயவிலை விற்பனை இருக்காது...வெறும் சந்தா மட்டுமே.. ஆனா ..இப்போ அதிகவிலைக்கு விற்கும் கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்துள்ளோம்...இது எங்கபோயி முடியுமோ? என்னை வாழவைக்கும் ரசிகர்களேன்னு மாரைதட்டிட்டு அவன்கிட்டே அதிகவிலைக்கு டிக்கெட் விற்க அனுமதித்து, கண்டுக்காம இருந்து கொள்ளையடிக்கும் நாம்,.யாரை வாழவைக்க ரசிகனின் தலையில் மொளகாய் ?..இதையெல்லாம் கவலையில்லை பேசவும் மாட்டோம் OTT நாசமபோகணும்...புரியுதுங்க..நமக்கு யாரவது ஒருத்தன் நாசமாகனும் ஹாப்பி.....
Rate this:
Vasanth - Madurai,இந்தியா
24 ஜன, 2021 - 17:21 Report Abuse
Vasanth தியேட்டர்ல என்ன சேர்த்தே 4 பேர் தான் இருந்தாங்க, இதுல இந்த கலெக்சன் ரிசல்ட் எல்லாம் யார் ரெடி பண்ற தெர்ல.
Rate this:
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
24 ஜன, 2021 - 12:26 Report Abuse
Anbuselvan தயாரிப்பாளர் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களை கேட்டால் தான் உண்மை நிலவரம் தெரியும். என்னை போல சாமானியர்கள் முதல் நாளில் படம் பார்க்க வில்லை. ஏன் ? இன்னமும் படம் பார்க்கவில்லை. எங்களை போல பலர் (ரசிகர் மன்றத்தில் இல்லாதோர்) இன்னமும் பலர் இருப்பார்கள் என நம்புகிறோம்.
Rate this:
KayD - ,
24 ஜன, 2021 - 14:25Report Abuse
KayD Same here. Correct aa soneenga.. விஜய் ajith படத்துக்கு may be தியேட்டர் la கொஞ்சம் importance irukum but others ku இருக்குமா nu தெரியாது... Enaku தெரிஞ்ச வரை எந்த தியேட்டர் um 50 occupancy இல்லை 200 occupancy with high priced tickets. Foolish fans irukira வரை இவங்களுக்கு கொண்டாட்டம் தான்.......
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in