பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழில் சமுத்திரகனி இயக்கத்தில் வெளிவந்த "நாடோடிகள்" படம் பெரும் வெற்றி பெற்றது. இதே படத்தை சமுத்திரக்கனி தெலுங்கில் இயக்கினார் அங்கு படுதோல்வி அடைந்தது. இப்போது இதை இந்தியில் ரீமேக் செய்கிறார் ப்ரியதர்ஷன். முதலில் சமுத்திரக்கனிதான் இயக்குவதாக இருந்தது. தெலுங்கு ரீமேக் தோல்வி அடைந்தால் சமுத்திரகனி பின்வாங்க ப்ரியதர்ஷனே இயக்குகிறார். ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனும் "சிறைச்சாலை" படத்துக்கு பிறகு இந்தப் படத்தில் ப்ரியதர்ஷனுடன் இணைகிறார். இந்தி தொலைக்காட்சி தொகுப்பாளர் பக்கானி என்பவர் ஹீரோ. ப்ரியா ஆனந்த் ஹீரோயின். இங்கிலீஷ் விங்கிலீசுக்கு பிறகு ப்ரியா ஆனந்த் நடிக்கும் இந்திப் படம் இது. "ராங்ரெஜ்" என்று படத்திற்கு பெயர் வைத்திருக்கிறார் ப்ரியதர்ஷன்.