வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
"பத்ரி, ஜில்லுன்னு ஒரு காதல் ஆகிய படங்களுக்கு பின், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் கவனம் செலுத்திய பூமிகா, தமிழ் படங்கள் எதிலும் நடிக்கவில்லை. இப்போது, தெலுங்கில் அவர் நடித்து, ஹிட்டான ஒரு படம், "பெண் அடிமை இல்லை என்ற பெயரில், தமிழில் "டப் செய்யப்பட்டுள்ளது. இதில், பிரகாஷ் ராஜ், ஆண் ஆதிக்க மனப்பான்மை கொண்ட கலெக்டராகவும், பூமிகா, அவரது மனைவியாகவும் நடித்துள்ளனர். கலெக்டராக இருந்தாலும், தன் மனைவியை, வீட்டு சமையல் அறைக்குள்ளேயே முடக்கி வைத்திருக்கும் பிரகாஷ் ராஜுக்கு, பெண்ணை அடிமைப்படுத்துவது தவறு என, புரிய வைக்கும், வித்தியாசமான வேடம், பூமிகாவுக்கு. "தமிழில் எப்போதுமே, எனக்கு செல்வாக்கு இருக்கிறது. தெலுங்கு, இந்தி படங்களில் கவனம் செலுத்துவதால், தமிழில் நடிக்க நேரம் இல்லை. இந்த படம் வெளியானதும், தமிழில் மீண்டும் நடிக்க திட்டமிட்டுள்ளேன் என்கிறார், பூமிகா.