நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
விஷால் நடித்த, "சத்யம் படத்தை இயக்கிய ராஜசேகர், தற்போது ஜெயப்ரதாவின் மகன் சித்தார்த் நடிக்கும் படமொன்றை இயக்கி வருகிறார். இதில், நாயகியாக ஹன்சிகா நடிக்கிறார். தற்போது, ஐதராபாத்தில் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. மற்றவர்களெல்லாம், முதல்நாளில் ஏதாவது சாமி கும்பிடுவது போன்ற காட்சிகளை படமாக்குவர். ஆனால், இப்பட இயக்குனரோ, ஹன்சிகாவும், சித்தார்த்தும் முத்தமிட்டுக் கொள்வது போன்ற, முதல்காட்சியை படமாக்கியிருக்கிறார். "முதல் நாளே முத்தக்காட்சியா என, சித்தார்த் தயக்கம் தெரிவிக்க, ஹன்சிகாவோ, துளியும் தயக்கம் காட்டாமல், காட்சிக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து, நடித்து அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினாராம்.