Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'துக்ளக் தர்பார்' சர்ச்சை : சீமானிடம் பார்த்திபன் நேரில் விளக்கம்

13 ஜன, 2021 - 17:49 IST
எழுத்தின் அளவு:
Parthiban-clear-about-tughlaq-durbar-issue

டெல்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷிகண்ணா மற்றும் பலர் நடிக்கும் படம் 'துக்ளக் தர்பார்'. இப்படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

அதில் அரசியல்வாதியாக நடிக்கும் பார்த்திபனின் பெயர் ராசிமான் என இடம் பெற்றுள்ளது. மேலும், அந்தப் பெயருடன் உள்ள கட்சி போஸ்டர்களை சிலர் கிழிப்பது போலவும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

ராசிமான் என்ற பெயர் நாம் தமிழர் கட்சித் தலைவைரான சீமானைக் குறிப்பதாக உள்ளதென அக்காட்சியின் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதனால் எழுந்த சர்ச்சையை அடுத்து ராசிமான் கதாபாத்திரத்தில் நடிக்கும் பார்த்திபன், சீமானிடம் நேரில் விளக்கமளித்துள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

“நண்பர் சீமான் அவர்களிடம் நேரிடையாக'துக்ளக் தர்பார்'குறித்து விளக்கமளித்து விட்டேன்.அவரும் பெருந்தன்மையாக பதில் அளித்தார் ராசிமான் என்ற பெயர் சீண்ட வேண்டு மென்று வைக்கப்பட்டதல்ல. இருந்திருந்தால் அதற்கு நானே இடந்தந்திருக்க மாட்டேன்.இந்நிமிடம் வரை நான் எக்கட்சியையும் சார்ந்தவனல்ல.

(புதிய பாதை நமது) இருப்பினும் இடையராது உழைத்து தங்களின் லட்சிய இலக்கை அடைய போராடும்'நாம் தமிழர்' தோழர்களின் முயற்சிகளை கிண்டல் செய்ய நான் இடம் தரமாட்டேன்.எனவே உள்நோக்கமின்றி நடந்த பெயர் பிரச்சனையை இயக்குனரிடம் கூறி, ராசிமான் என்ற பெயரை மாற்ற முயற்சி செய்து வருகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
'ஈஸ்வரன்' பிரச்சினைகள் தீராமலேயே வெளியீடு'ஈஸ்வரன்' பிரச்சினைகள் தீராமலேயே ... விஜய்யின் நட்பைப் பாராட்டும் ஸ்ரீமன் விஜய்யின் நட்பைப் பாராட்டும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
15 ஜன, 2021 - 20:06 Report Abuse
கல்யாணராமன் சு. போற போக்கை பாத்தா சினிமாலே யாருக்கும் சாதாரண பேர் வெக்கமுடியாது போல .....எல்லோரையும் தமிழ் எழுத்துக்கள் 247, மற்றும் ஆங்கில எழுத்துக்கள் 26 ஆகியவற்றவையே பேராக வெக்கணும் போலிருக்கு ...... இனிமே ஹீரோ பேர் A, B, C, அப்படின்னும், வில்லன் பேர் Z, Y, X , அப்படின்னும் வைக்குமாறு தயாரிப்பாளர்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .........
Rate this:
Siva Kumar - chennai,இந்தியா
15 ஜன, 2021 - 04:53 Report Abuse
Siva Kumar கட்சி தலைவருக்கு மரியாதை கொடுத்து சீமார் என்று சொல்லுங்கள்.
Rate this:
Shekar - Mumbai,இந்தியா
14 ஜன, 2021 - 21:40 Report Abuse
Shekar மூளையை அடகு வச்ச கூட்டம்
Rate this:
S Bala - London,யுனைடெட் கிங்டம்
14 ஜன, 2021 - 08:19 Report Abuse
S Bala தன்னிடம் நூறு அடியாட்கள் இருந்தால் யாரையும் பயமுறுத்தலாம் என்ற நிலையில்தான் இருக்கிறது நமது ஆட்சி
Rate this:
Pandian - Boston,யூ.எஸ்.ஏ
13 ஜன, 2021 - 20:40 Report Abuse
Pandian இதெல்லாம் வேற யாருடையாவது வச்சுக்குக்கோ. நாம் தமிழர் ☝️
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in