ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவ நடிகருடன் நடித்த தும்மல் நடிகர் அவர். பார்க்கத்தான் ஆள் பசுமாதிரியிருக்கிறாராம். ஆனால் அந்த விஷயத்தில் அவர் புலியாம். அதற்கெல்லாம் "அஞ்சவே" மாட்டாராம். தற்போது வெற்றிகரமான செல்வன் என்ற படத்தில் நடித்து வரும் அவர் அதில் ஹீரோயினாக நடித்து வரும் வடநாட்டு நடிகையிடம் தன் சில்மிஷத்தை காட்டியிருக்கிறார். ஆனால் ரொம்ப கறாரான அந்த ஹீரோயின் "என்கிட்ட இந்த வேலையெல்லாம் வச்சிக்கிட்ட சந்தி சிரிக்க வச்சுடுவேன்"னு சவுண்ட் விட நடிகர் அப்செட்டாம். தன் முயற்சி தோல்வி அடைந்ததால் வேண்டுமென்றே பல டேக்குகள் வாங்குவது, நெருக்கமான காட்சிகளில் இன்னும் நெருக்கமாக தொல்லை கொடுப்பது என்று தன் உள்ளடி வேலைகளை செய்திருக்கிறார். பொறுமை இழந்த ஹீரோயின் இயக்குனரிடம் புகார் சொல்ல, இயக்குனர் தயாரிப்பாளரிடம் சொல்ல கோவையில் பவர்புல்லாக இருக்கும் தயாரிப்பாளர். ஹீரோவை கூப்பிட்டு "தம்பி உங்க வேலையெல்லாம் படத்துக்கு வெளியில வச்சுக்குங்க. மீறி நடந்தீங்கன்னா கோயம்புத்தூரை தாண்டி சொந்த ஊர் கேரளாவுக்கு போகமுடியாது" என்று அன்பாக மிரட்ட அதன் பிறகு ஒழுங்காக நடித்துக் கொடுத்தாராம்.