Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

இவரைப் போல் பாடல் எழுத வேண்டும் என்று நினைக்காதீர்கள்! - மதன் கார்கி சிறப்பு பேட்டி!!

13 நவ, 2012 - 13:18 IST
எழுத்தின் அளவு:

இன்றைய தேதியில் சினிமாவில் ரொம்ப பிஸியான பாடலாசிரியர் யார் என்றால் நிச்சயம் அது மதன் கார்கி தான். கம்ப்யூட்டர் இன்ஜினியரான கார்கி, எந்திரன் படத்திற்கு தான் முதலில் பாட்டு எழுதினார். ஆனால் அதற்கு முன்பாகவே "கண்டேன் காதலை" படம் ரிலீஸாகிவிட்டது.  பின்னர் எந்திரன் படம் மூலம் பிரபலமானார். தொடர்ந்து தனக்கே உரிய பாணியில் புது சிந்தனைகளோடும், புதுப்புது வரிகளோடும் தமிழ் சினிமாவில் நம் அனைவரின் இதயத்தில் நிற்கிறார். கோ படத்தில் அவர் எழுதிய என்னமோ ஏதோ, ஏழாம் அறிவில் சீன மொழிப்பாடல், நண்பனில் அஸ்க் அஸ்க்... உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களிடம் வெகுவாக பாராட்டப்பட்டது. தற்போது சினிமாவில் பிஸி பாடலாசிரியராக இருக்கும் கார்கி, தினமலருக்கு அளித்த பிரத்யேக தீபாவளி பேட்டி இதோ...

* எதற்கெல்லாம் பயம்?


ஆழம், உயரம் இவை இரண்டுக்கும் பயம். அதை விட பயம், கதாநாயகனுக்கும் நாயகிக்கும் காதல் தோன்றுகிறது, இந்த சூழலில் ஒரு பாடல் என்று இயக்குனர்
சொல்லும் நொடிகள்.

* சமீபத்தில் ரசித்த பாடல் வரி...

"காச நோய்க் காரிகளும்
கண்ணுறங்கும் வேளையில
ஆசநோய் வந்தமக
அரை நிமிசம் தூங்கலையே"  கடல் படத்தில் அப்பா எழுதிய வரிகள்.

* திரைத்துறையில் இருந்து வந்த பாராட்டுகளில் மறக்க முடியாத பாராட்டு எது?


நான் ஈ பாடல்களைக் கேட்டுவிட்டு கிரேசி மோகன் அவர்கள் எனக்காக எழுதிய வெண்பா
"தாயாரா தந்தையா தீந்தமிழை தந்துமக்கு
வாயார ஊட்டியது; வாரீசு - சேயாரே
யார் கீ கொடுத்தார் எதுகைக்கும் மோனைக்கும்
கார்க்கிசினி மாவை கலக்கு…!"

* இதுவரை நீங்கள் எழுதிய பாடல்களில் டாப் 10 எவை?

வாய மூடி, என்னமோ ஏதோ, இரும்பிலே ஓர் இருதயம், அஸ்க் லஸ்கா, நீ கோரினால், அழைப்பாயா, நெஞ்சில் நெஞ்சில், வீசும் வெளிச்சத்திலே, கூகுல்
கூகுல்.

* புதிய பாடலாசிரியர்களில் உங்கள் மனம் கவர்ந்தவர்கள் யார்?


நா முத்துக்குமார், கபிலன், தாமரை, கார்த்திக் நேத்தா.

* இந்தப் பாடலை எழுதியிருக்க வேண்டாமே என்று எந்தப் பாடலுக்காவது வருந்தியதுண்டா?


இல்லை. அப்படி எதிர்காலத்தில் வருத்தப்படுவேன் என்று தோன்றிய பாடல்களை வாய்ப்பு வரும்பொழுதே மறுத்துவிடுகிறேன். இன்னும் அழகாக எழுதியிருக்கலாம் என்று இப்பொழுதும் தோன்றும் பாடல் பூம் பூம் ரோபோடா.

* மரணத்தின் நொடிகள் எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்?


தூரத்தில் என் பாடல் எங்கோ ஒலித்துக்கொண்டிருக்க, மனைவியின் கண்களில் கடந்து வந்த அழகிய இறந்த காலத்தையும், மகனின் கண்களில் நம்பிக்கையான ஒரு
எதிர்காலத்தையும் பார்த்துக் கொண்டே…

* புதிதாக பாடல் எழுதும் ஆர்வத்தில் வரும் இளைஞர்களுக்கு என்ன சோல்வீர்கள்?

இவரைப் போல் எழுத வேண்டும் என்றோ அந்தப் பாடலைப் போல் எழுத வேண்டும் என்றோ சிந்திக்காதீர்கள்.

* நேரத்தை விரயம் செய்யும் ட்விட்டர் ஃபேஸ்புக் போன்ற இணைய தளங்களில் இருப்பதன் நன்மை என்ன?

சரியான முறையில் பயன்படுத்தினால் நன்மைகள் ஏராளம். நேரம் மிச்சப்படுத்தலாம். என் ஆராய்ச்சி தொடர்பான கேள்விகளுக்கு சில நொடிகளில் விடை கிடைக்கிறது. இந்த சமூக பிணையங்கள் இல்லை என்றால் பல மாதங்கள் ஆகியிருக்கும். ஒட்டுமொத்த சமூகத்தின் அறிவு தனி மனித அறிவை விட பெரியது. என் பாடல்களை, திட்டப்பணிகளை பல லட்சம் பேருக்கு கொண்டு சேர்க்கும் எளிமை மட்டுமல்ல, அவை பற்றிய சமூகத்தின் பார்வையையும் உடனுக்குடன் நமக்கு கிடைக்கச்செய்யும் வலிமை சமூக பிணையங்களுக்கு உண்டு.

* பழைய பாடல்கள் போல் இப்போது பாடல்கள் இருப்பதில்லை எனும் குற்றச்சாட்டுக்கு உங்கள் கருத்து என்ன?


என் தந்தைக்கு உன்னை ஒன்று கேட்பேன் பழைய பாடல். எனக்கு சின்ன சின்ன ஆசை பழைய பாடல். என் மகனுக்கு என்னமோ ஏதோ பழைய பாடல். அது குற்றச்சாட்டு அல்ல, இளவயதில் நம்மை மயக்கிய பாடல்கள் மேல் உள்ள உடைமையுணர்வின் வெளிப்பாடு.

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

தமிழ் - Coimbatore,இந்தியா
22 நவ, 2012 - 11:16 Report Abuse
 தமிழ் கண் மூடிடும் அவ்வேளையும், உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்.... உங்கள் வாழ்வின் வரிகள் என்பது "மரணத்தின் நொடிகள் எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்?" கேள்விக்கான பதிலில் இருந்து விளங்குகிறது.....!!! நீங்கள் தமிழ் துறைக்கும் திரைக்கும் கிடைத்த ஓர் அரிய பரிசு......
Rate this:
அசோக் குமார் - TRICHY,இந்தியா
18 நவ, 2012 - 22:04 Report Abuse
 அசோக் குமார் எத்தனை முறை சொல்வது என்னதான் வார்த்தை ஜாலத்தில் பாடல் எழுதினாலும் அது நிற்பதும் காணாமல் போவதும் இசையில் தான். ஏன் இவர் அப்பாதான் வார்த்தை ஜாலத்தில் நிறைய சம்பாதித்து வைத்து இருக்கிறாரே இவர் ஒரு டாக்டருக்கு படித்து விட்டு சேவை செய்ய போக வேண்டியதுதானே ஐவரும் ஏன் ஜல்லி அடிக்க வருகிறார்.
Rate this:
VENKATESH - dammam,சவுதி அரேபியா
14 நவ, 2012 - 11:15 Report Abuse
 VENKATESH இவருடைய பதிலில் தெரிகிறது இவரின் சிந்தனையின் ஆழம்
Rate this:
கார்க்கி ஜான்ஸன் - மதுரை,இந்தியா
14 நவ, 2012 - 09:21 Report Abuse
 கார்க்கி ஜான்ஸன் மதன் கார்க்கியின் பாடல் வரிகள் போல அவரது பேட்டியும் அழகாகவும் எளிமையாகவும் இருக்கிறது. பூம் பூம் ரோபோ டா பாடல் நன்றாக உள்ளது கார்க்கி நீங்கள் அதை இன்னும் சிறப்பாக எழுதியிருக்கலாமோ என்பது குறித்து கவவை கொள்ள வேண்டாம். சிக்கிமுக்கி அக்கினி வழி வழிய ஒருவனின் காதலில் பிறந்தவனோ, எஃகினிலே பூத்தவனோ எங்களின் காதலைச்சேர்த்தவனோ, திருமணத் திருநாள் தெரியும்முன்னே நீ எங்கள் பிள்ளையோ, சொல்வ தெல்லாம் கேட்டுவிடும் காதலன் இதுபோல் அமையாதோ போன்ற வரிகள் நான் மிகவும் ரசித்தவை.
Rate this:
கவிப்ரிய - Chennai,இந்தியா
13 நவ, 2012 - 22:38 Report Abuse
 கவிப்ரிய மரணத்தின் நொடிகள் எப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்?... அழகான ஆழமான பதில்
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in