Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சிம்புவுக்கு ஐ லவ் யூ சொல்ல சொன்ன சர்ச்சை: சுசீந்திரன் விளக்கம்

04 ஜன, 2021 - 15:38 IST
எழுத்தின் அளவு:
Suseendiran-explain-about-I-love-you-issue-on-Eeswaran-audio-launch

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, ஆல்பட் தியேட்டரில் நடந்தது. அதில் சிம்பு, பாரதிராஜா, படத்தின் நாயகி நிதி அகர்வால் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிதி அகர்வால் மேடையில் பேசினார்.
அப்போது இயக்குனர் சுசீந்திரன், விழாவில் அமர்ந்திருந்த சிம்புவை பார்த்து ஐ லவ் யூ சிம்பு மாமா என்று சொல்லுமாறு நிதி அகர்வாலை தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே இருந்தார். இதனால் நிதி அகர்வால் தர்மசங்கடத்தில் தவித்தார். என்ற போதும் கடைசி வரை அவர் அப்படி சொல்லவில்லை.

இது விழாவுக்கு வந்த பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்தது. இந்த நிகழ்வு குறித்து நிதி அகர்வாலும் மிகுந்த வருத்தமும், கோபமும் அடைந்துள்ளார். அதோடு சமூகவலைதளங்களிலும் சுசீந்திரனின் செயலுக்கு கண்டனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் இதுகுறித்து சுசீந்திரன் விளக்கம் அளித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நிதி அகர்வாலும் அமர்ந்திருக்கிறார். சுசீந்திரன் கூறியிருப்பதாவது: ''ஈஸ்வரன் பாடல் வெளியீட்டு விழாவில் சிம்புவை பார்த்து ஐ லவ் யூ மாமா என்று நிதி அகர்வாலை கூற சொன்னதை பலர் தவறாக நினைத்து விட்டார்கள். படம் முழுக்க அவர் சிம்புவை ஐ லவ் யூ மாமா என்றபடியே சுற்றி சுற்றி வருவார். அதை உணர்த்தும் முகமாக படத்தின் கேரக்டரை மனதில் வைத்தே அவ்வாறு கூறினேன். இதுகுறித்து யாராவது தவறாக நினைத்திருந்தால் அதை மாற்றிக் கொள்ளவும் என தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
புதிய பெயரில் தனி கட்சி தொடங்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் - கடும் அதிருப்தியில் விஜய்!புதிய பெயரில் தனி கட்சி தொடங்கும் ... குரூப் 1 தேர்வில் பரியேறும் பெருமாள் குரூப் 1 தேர்வில் பரியேறும் பெருமாள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

பிஞ்சதலையன் - கோவை,இந்தியா
07 ஜன, 2021 - 12:17 Report Abuse
பிஞ்சதலையன் எப்படியாவது படத்துக்கு ஒரு விளம்பரம் வேணுமுன்னு என்னவெல்லாம் பண்ணுறானுவோ இதுக்கு படம் தரமா இருந்தா ரசிகன் தான படம் பக்க வர போறான் 🎈🎆
Rate this:
ngopalsami - Auckland ,நியூ சிலாந்து
07 ஜன, 2021 - 10:19 Report Abuse
ngopalsami அய்யா டைரெக்டரே, நீ மேடையில் நடந்து கொண்ட விதமே சரியில்லை. மேடை நாகரீகம் என்று ஒன்று உள்ளது.
Rate this:
Bye Pass - Redmond,யூ.எஸ்.ஏ
06 ஜன, 2021 - 09:38 Report Abuse
Bye Pass சினிமாவுல நடிச்சதுக்கு காசு தந்தாங்க ..இலவசமா சொல்லனும்னா அதுக்கு ஒரு நல்ல மூஞ்சி வேணாமா
Rate this:
THENNAVAN - CHENNAI,இந்தியா
06 ஜன, 2021 - 09:18 Report Abuse
THENNAVAN நாங்க எப்போதும் கருத்துக்களை மாற்றிக்கொள்ளனும் ,ஆனால் உங்களைபோன்றவர்களின் கருதுமட்டும் என்ன பெரிய கருத்தா என்ன போயா வந்துட்டான் .(பூனைமேலே மதில்சுவாருனு )
Rate this:
Tamilan - kailasa,இந்தியா
06 ஜன, 2021 - 07:18 Report Abuse
Tamilan தமிழ் சினிமா கேவலமாக போய்க்கொண்டு இருக்கிறது ...
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in