Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

எளிமையான அணுகுமுறையால் வாய்ப்புகளை குவிக்கும் மதன் கார்க்கி

Madhan Karkis simply best
மற்ற பாடலாசிரியர்களை விட தற்போது அதிக பாடல்களை எழுதிக் கொண்டிருப்பவர் மதன் கார்க்கிதான். சிவாஜியில் எழுதத் தொடங்கியவர் இதுவரை 180 பாடல்களை எழுதி முடித்து விட்டார். அதில் 100 பாடல்கள் ஹிட். மதன் கார்க்கியின் எளிமையே அவருக்கு நிறைய பாடல் வாய்ப்புகளை பெற்றுத் தருகிறதாம். முதலில் தான் வைரமுத்துவின் மகன் என்கிற மாதிரி எந்த இடத்திலும் காட்டிக் கொள்ள மாட்டார். மற்ற பாடலாசிரியர்களுக்கு இருக்கும் "வேறுவித" பழக்கங்கள் எதுவும் அவருக்கு கிடையாது. அவசரமாக பாட்டு வேண்டும் என்றால் கம்பெனி அலுவலகத்துக்கே வந்து அமர்ந்து எழுதிக் கொடுத்துவிட்டுப்போவார். எத்தனை திருத்தம் என்றாலும் புன்முறுவலோடு செய்து கொடுப்பார். சிறிய பட்ஜெட் படம் என்றாலும் தேடிப்போய் வாய்ப்பு கேட்பார். தராவிட்டாலும் சிரித்து நன்றி சொல்லிவிட்டு திரும்புவார். சில கம்பெனிகள் கார்க்கி யார் என்று தெரியாமல் திருப்பி அனுப்பி விட்டு, தெரிந்த பிறகு ஓடிவந்து வாய்ப்பு தர வந்திருக்கிறார்கள். அப்போது "நீங்கள் என் திறமையை நிராகரித்துவிட்டீர்கள். இப்போது இன்னார் மகன் என்று வாய்ப்பு தர வருகிறீர்கள். மன்னிக்கணும். உங்க நிராகரிப்பை நான் ஏற்றுக் கொண்டுவிட்டேன்" என்று சொல்லிவிடுவார். எல்லாவற்றுக்கும் மேலாக வெளிநாட்டுக்கு போனால்தான் பாட்டு வரும், கேரளாவின் படகு வீட்டில் உட்கார்ந்தால்தான் பாட்டு வரும். என்று தயாரிப்பாளருக்கு எந்த செலவும வைப்பதில்லை. ஒரு பாட்டுக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று பேரம் பேசுவதில்லை. கொடுக்கிற சம்பளத்தை இன்முகத்தோடு பெற்றுக் கொள்வார். என்கிறார்கள்.

கார்க்கிய பார்த்து கத்துக்குங்க கவிஞர்ஸ்...!!

Tags »
Madhan Karki, மதன் கார்கி,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (15)

கோமள வள்ளி - Komal City,கஜகஸ்தான்
2012-11-14 20:54:51 Report Abuse
 கோமள வள்ளி ஏய் கல்லா கட்டுவது இப்படி அப்படின்னு ஒரு புக் போடுப்பா. நல்லா அதுலயும் துட்டு பாக்கலாம். ஏற்கனவே ஹோச்டல் வரும்படி அப்புறம் மென்பொருள் அப்புறம் கவிதை, அப்புறம் புஸ்தக விற்பனை அப்புறம் இத்தியாதி இத்தியாதி கட்டு கட்டு நீ கல்லா கட்டு
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
வடுவூறான் - Chennai,இந்தியா
2012-11-14 06:37:47 Report Abuse
 வடுவூறான் இந்த செய்தியை இவரு அப்பாரு முதல்ல படிச்சு திருந்துனா நல்லா இருக்கும்
Rate this:
3 members
0 members
0 members
Share this comment
நித்யஸ்ரீ - Manjakuppam ,இந்தியா
2012-11-13 21:01:40 Report Abuse
 நித்யஸ்ரீ கரிமேடு கருவாயா தமிழை வச்சு நல்லா பொழப்பு ஒட்டுராங்கையா ஓட்றாங்க. உங்கப்பு அவரு சிங்கி அடிக்கும் அந்த தப்பு தானை தலைவலி இப்படி நெறைய தமிழ்பால் கல்லா நல்லா கட்டுது. அது சரி நீ சாப்ட்வேர் வேலை விட்டுவிட்டு தமிழ் பாட்டு எழுதி கல்லா பெட்டி கொட்டுது.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
anbarasan - abudhabi  ( Posted via: Dinamalar Android App )
2012-11-13 12:47:54 Report Abuse
anbarasan இப்படியே எப்பொழுதும் இருக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
பிலால் - dubai,இந்தியா
2012-11-13 12:26:17 Report Abuse
 பிலால் வாழ்த்துக்கள், ஒரு அபூர்வமான மனிதர்.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் கோலிவுட் செய்திகள்

Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in