Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

தீபாவளியை சந்தோஷமா கொண்டாடுங்க...! - வாழ்த்துகிறார் டாப்சி

12 நவ, 2012 - 09:08 IST
எழுத்தின் அளவு:

இந்தியாவின் கோதுமை களஞ்சியமான பஞ்சாப் தந்த, அழகு களஞ்சியம், டாப்சி. "மிஸ் ப்ரெஷ் பேஸ், மிஸ் பியூட்டிபுல் ஸ்கின் என, அழகுக்காக வழங்கப்படும் ஒட்டு மொத்த விருதுகளையும் வாங்கி, @ஷா@கசில் வைத்து விட்டு, நடிக்க வந்தவர். டாப்சி  அளித்த சிறப்பு பேட்டி:

தீபாவளி பண்டிகையை எப்படி கொண்டாடுவீங்க?

வட மாநிலங்களில் தீபாவளி பண்டிகையை விமரிசையாக  கொண்டாடுவாங்க. ஒவ்வொரு வருஷமும் உற்சாகம் அதிகமாயிட்டு தான் இருக்கு. வீட்டில் காலையில் எழுந்து, தீபம் எல்லாம் வைப்பாங்க.  நான் நல்லா ரங்கோலி போடுவேன். வீடே ரொம்ப கலர்புல்லா இருக்கும். ப்ரண்ட்ஸ் எல்லாருக்கும் ஸ்வீட்ஸ் கொடுப்போம். வெடி மட்டும் வெடிக்க மாட்டேன். சத்தம் எனக்கு பிடிக்காது.

ஸ்வீட்ஸ் விரும்பி சாப்பிடுவீங்களா?


அதிகமா ஸ்வீட்ஸ் பிடிக்காது; எப்பவாச்சும். காஜூகட்லி என்ற ஸ்வீட்டை விரும்பி சாப்பிடுவேன். வழக்கமா இருக்குற ஸ்வீட்சை விட, தீபாவளிக்கு வீட்டில் நிறைய ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் இருக்கும். டேஸ்ட் பார்ப்பேன். தோழிகளை வீட்டுக்கு அழைத்து வந்து, விருந்து வைத்து, பரிசுப் பொருட்களை கொடுப்பேன்.

உங்க "ட்ரீம் ரோல் எதுவும் இருக்கா?

அப்படி எல்லாம் எதுவும் இல்லை. நான் நடிக்கும் "ரோல் எல்லாமே வித்தியாசமாக இருக்க வேண்டும் என்ற, ஒரு ஆசையைத் தவிர, வேறு ஆசைகள் இல்லை. "ஆடுகளம், வந்தான் வென்றான், மறந்தேன் மன்னித்தேன் இப்படி. நான் நடித்த, மூன்று படங்களிலுமே, எனக்கு வித்தியாசமான கேரக்டர்கள் தான்.

தெலுங்கு, தமிழ் படங்களில் நடிப்பதில், என்ன வித்தியாசம்?

தெலுங்கு திரைப்படங்கள், பெரிய கதைக் களத்தை கொண்டதாக, படு கிளாமராக இருக்கும். தமிழில், மண் சார்ந்த விஷயங்களை மையமாக வைத்து, படங்கள் தயாரிக்கப்படுகின்றன. படம் பார்ப்பவர்களின் மனதை தொடும் விஷயங்கள், தமிழில் அதிகம் உள்ளன.

தமிழில் என்ன பேச தெரியும்?

எனக்கு இன்னும் சரளமாக தமிழ் பேச வராது.  ஒரு சில வார்த்தைகள் மட்டுமே தெரியும்.  முன்னாடி, "பின்னாடி, வாங்க, போங்க, மழை, டாப்சி பேசுறேன், உன்னை பிடிச்சிருக்கு போன்ற வார்த்தைகளை,  தமிழ் படப் பிடிப்புகளின் போது தான்,  கற்றுக் கொண்டேன்.

ரசிகர்களுக்கு சொல்ல விரும்புவது?

தமிழ் ரசிகர்கள் எனக்கு அமோக ஆதரவு அளிக்கின்றனர். இதற்காக, அவர்களுக்கு ஸ்பெஷல் நன்றி. சிறிய இடைவெளி ஏற்பட்டபோது, "தமிழில் நடிக்க மாட்டீர்களா என, ரசிகர்களிடம் இருந்து,கேள்விகள் வந்தன. இதோ... ரசிகர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவே, மீண்டும் தமிழில் நடிக்கிறேன்.  தீபாவளிய சந்தோஷமா கொண்டாடுங்க. பாதுகாப்பாக,  வெடி வெடிங்க.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; காத்திருக்கும் சவால்கள்! 2021 - தமிழ் சினிமாவின் பாதை மாறுமா? ; ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in