இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
ஹன்ஷிகாக மாதிரியே பெயர் இருக்கு. அழகாவும்தான் இருக்கிறார். ஆனாலும் ஏனோ தன்ஷிகாவுக்கு ராசி இல்லாத நடிகைன்னு பெயர் வந்துவிட்டது. பேராண்மைதான் முதல் படம் அந்தப் படம் மட்டும்தான் சுமாராக போனது. அடுத்து வசந்த பாலன் இயக்கிய அரவான் கைவிட்டது. இடையிடையே நடித்த சில படங்களும் ஃபிளாப் ஆனது. இப்போது பாலாவின் பரதேசி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதுவாவது கைகொடுக்குமா என்று யோசித்துக் கொண்டிருக்கும்போது மலையாளத்தில் பெரிய இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்திருக்கிறது.
ஷாஜி கைலாஷ் இயக்கும் புதிய மலையாளப்படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக நடிக்கிறார். செண்டிமெண்டாக முதல் காட்சி குருவாயூர் கோவிலில் நடத்தியிருக்கிறார்கள். தன்ஷிகாவுக்கு மலையாளம் தெரியாது என்றாலும் மலையாள வசனங்களை தமிழில் எழுதிவைத்து மலையாள சேட்டன்களை அசத்துகிறாராம். தன்ஷிகா எல்லா விதத்திலும் திறந்த மனதுடன் இருப்பதால் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்திருப்பதாக சொல்கிறார்கள்.
மலையாளத்து தேவதைகள் தமிழ்நாட்டை கலக்கும்போது, தஞ்சாவூர் பொண்ணு மலையாளத்தை கலக்கட்டுமே...!!