Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர்களுக்கு எதிராக நடிகர் சங்க செயலாளர்...!

07 நவ, 2012 - 16:58 IST
எழுத்தின் அளவு:

நடிகர்களுக்கு எதிராக நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாவி பேசி வரும் பேச்சுக்கள் முன்னணி நடிகர்கள் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் ராதாரவி நடிகர் சங்க பொதுச் செயலாளராக இருந்தாலும் அவருக்கு சினிமா வாய்ப்புகள் எதுவும் இல்லை. ஆனால் நடிகர், நடிகைகளின் சம்பள பிரச்னைகளில் பஞ்சாயத்து பேசி வாங்கிக் கொடுத்து இருதரப்பினரிடமும் கமிஷன் பெற்றுக் கொள்வார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர்களுக்கு எதிரான அவர் தொடர்ந்து பேசி வருவது குறித்து வருகிற சங்க கூட்டத்தில் பிரச்னையை கொண்டு வர பெரிய நடிகர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.

சமீபத்தில் சத்திரம் பேருந்து நிலையம் என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் அவர் பேசியது நடிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் பேசியது இதுதான் "அந்தக் காலத்தில் தயாரிப்பாளர்களின் காலில் விழுந்து வணங்கினார்கள் நடிகர்கள். காரணம் தயாரிப்பாளர்கள்தான் முதலாளிகள். ஆனால் இன்றைக்கு காலை வாருபவர்களாக இருக்கிறார்கள். இன்றைக்கு புரட்யூசரை யாருக்கும் தெரியவில்லை. பெரிய படம் எடுத்த புரட்யூசர்களைகூட இவர் இன்ன படம் எடுத்தார் என்றுதான் அறிமுகப்படுத்த வேண்டியிருக்கிறது. ஒரு படம் வெற்றி பெற்றால் அதன் இயக்குனரும், நடிகரும் உட்கார்ந்து வெற்றியை கொண்டாடுகிறார்கள். தைரியமாக பணம்போட்டு படம் எடுத்த தயாரிப்பாளரை யாரும் கண்டுகொள்வதில்லை. தயாரிப்பாளர்களும் நடிகர்களின் பின்னால் ஓடுகிறார்கள். நடிகர்களுக்கு படத்துக்கு படம் சம்பளம் உயர்த்திக் கொடுத்து அவர்களை பெரிய ஆளாக ஆக்குபவர்கள் தயாரிப்பாளர்கள். ஒரு படம் ஓடாவிட்டாலும் அதில் நடித்த நடிகர் அடுத்த படத்துக்கு சம்பளத்தை உயர்த்தி விடுகிறார். வில்லனாக நடிக்கும் ஒரு சாதாரண நடிகர் 25 லட்சம் சம்பளம் கேட்கிறார்" என்று பேசினார். ராதாரவியின் இந்த பேச்சு நடிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்குத்துங்றது இதுதானோ...

Advertisement
கருத்துகள் (6) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (6)

kannan - houston,இந்தியா
09 நவ, 2012 - 22:06 Report Abuse
 kannan The comments expressed by Radha Ravi, should be accepted in true spirits without showing any bitterness.
Rate this:
சாமீ - karaikal ,இந்தியா
08 நவ, 2012 - 14:08 Report Abuse
 சாமீ அவர் சொன்னதுல என்னங்க தப்பு? ...... உண்மை எப்பவுமே கசக்கத்தான் செய்யும்....... உண்மை
Rate this:
christ - chennai,இந்தியா
08 நவ, 2012 - 12:28 Report Abuse
 christ ராதாரவி சொல்வதில் என்ன தப்பு ? இன்றைய சினிமா உலகத்தில் பணம் போடும் தயாரிப்பாளர் நடிகர் ,இயக்குனரு பின்னாடி ஓடுவதுபோல் இருக்கு
Rate this:
பார்த்திபன் - tirupur,இந்தியா
08 நவ, 2012 - 10:26 Report Abuse
 பார்த்திபன் அவர் சொன்னதுல என்னங்க தப்பு? ...... உண்மை எப்பவுமே கசக்கத்தான் செய்யும்.......
Rate this:
vijay - singapore,சிங்கப்பூர்
08 நவ, 2012 - 04:51 Report Abuse
 vijay அவர் கூறுவது 100 % உண்மை.
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in