ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்தியில் சமீபகாலமாக தீபிகா படுகோனேவின் மார்க்கெட் டல்லடித்து வருகிறது. அதனால் தற்போது ரஜினியுடன் கோச்சடையான் படத்தில் நடித்திருக்கும் அவர் இந்த சூட்டோடு அடுத்தடுத்து புதிய படங்களை கைப்பற்றி கோலிவுட்டில் கோலேச்ச வேண்டும் என்று சில முன்னணி டைரக்டர்களுக்கு நூல் விட்டு வருகிறார். குறிப்பாக பிரமாண்ட பட்ஜெட் போடும் இயக்குனர்களாக தேடிப்பிடித்து சான்ஸ் கேட்டு வருகிறார் தீபிகா.
அதன்காரணமாக, கோச்சடையான் படவிசயமாக சென்னை வரும்போதெல்லாம் சில இயக்குனர்களை இலக்கு வைத்து கல்லெறிந்து வருகிறார். முக்கியமாக ஷங்கர் இயக்கி வரும் ஐ படத்துக்கு கூட தீவிரமாக முயற்சி எடுத்திருக்கிறார் தீபிகா. ஆனால் ரஜினி படத்தில் அவர் நடித்து வரும்போது, நாம் இந்த பக்கமாக இழுத்துவந்தால் சரியல்ல என்று ஷங்கர் யூனிட் விலகிக்கொண்டதாம். அதன்பிறகுதான் எமி ஜாக்சன் பக்கம் திரும்பியிருக்கிறார்கள். என்றபோதும், தீபிகாவின் கோடம்பாக்க பட வேட்டை தொடர்கிறது.