பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஷாலுடன் இணைந்து சுனைனா நடித்துள்ள முதல் படம் சமர். இந்த படத்தில் த்ரிஷா என்ற முன்னணி நாயகி இருந்தபோதும், சுனைனாவுக்கும் அதிகப்படியான காட்சிகள் கொடுத்திருக்கிறார்களாம். அதற்கு காரணம் விஷால்தானாம். ஆரம்பத்தில் விஷாலை விட்டு விலகியே நின்றாராம் சுனைனா. ஆனால் ஒருகட்டத்தில் தன்னுடன் சேர்ந்து சாப்பிட அழைப்பது. அவருடன் ஜாலியாக அரட்டையடிப்பது என்று மெல்ல மெல்ல சுனைனாவையும் தனது தோழியாக்கியிருக்கிறார் விஷால். அதுமட்டுமின்றி, த்ரிஷாவை மனதில் கொண்டு சுனைனாவின் கேரக்டரை இயக்குனர் டம்மியாக்கி வைத்திருந்ததைப்பார்த்து, அவருக்கும் கூடுதல் காட்சிகள் கொடுங்கள். வளர்ந்து வரும் நடிகை என்று சுனைனாவுக்கு நேரடியாக சிபாரிசும் செய்திருக்கிறார் விஷால்.
இதனால் அந்த சம்பவத்துக்குப்பிறகு விஷாலுக்கு மிக நெருக்கமான தோழியாகி விட்டாராம் சுனைனா. இப்போது அப்படத்தில் நடித்து முடித்து விட்டபோதும், அடிக்கடி போன் போட்டு நலம் விசாரிக்கிறாராம் விஷால். அதனால் நான் இதுவரை ஜோடி சேர்ந்து நடித்த நடிகர்களில் விஷால்தான் ரொம்ப நல்லவர். அவருக்கு ரொம்ப நல்ல மனசு என்று தனது சினிமா நண்பர்களிடம் பெருமையாக சொல்லி வருகிறார் சுனைனா.