Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

விஜய் ஜோடியானார் அமலாபால்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Amalapaul to pair with vijay in vijay direction
தாண்டவம் படம் கொஞ்சம் தடுமாறியதும் இயக்குனர் விஜய் படத்தில் இளையதளபதி விஜய் நடிக்க மாட்டார் என்ற செய்திகள் வெளியானது. ஆனால் விஜய் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றி இயக்குனர் விஜய் படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. படத்தை தயாரிப்பவர் சந்திரபிரகாஷ் ஜெயின். ரிக்ஷா மாமா, பாட்டுக்கு நான் அடிமை, டி.ராஜேந்தரின் வசந்த கீதம் உள்பட பல படங்களை தயாரித்தவர். கரகாட்டக்காரன், சின்னத்தம்பி, காஞ்சனா உள்பட 200 படங்களுக்கு மேல் விநியோகம் செய்தவர். இவரது மிஷ்ரி புரொடக்ஷன்தான் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

விஜய் ஜோடியாக நடிப்பவர் எல்லோரும் எதிர்பார்த்ததைப்போலவே அமலா பால். இயக்குனர் விஜய்க்கும், அமலாபாலுக்கும் காதல் என்ற செய்தி பரவிக்கிடந்த நேரத்தில் அதை கடுமையாக மறுத்தவர் விஜய். தன் காதல் பரிசாக அமலாபாலை விஜய்க்கு ஜோடியாக்க போகிறார் என்ற செய்தியையும் மறுத்தார். ஆனால் இப்போது அமலாபால்தான் ஹீரோயின் என்று முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. (இப்போது என்ன சொல்லவாரோ தெரியவில்லை).

மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. அனைத்து அம்சங்களும் நிறைந்த பொழுதுபோக்கு படமாக இப்படம் இருக்கும் என்றும், படப்பிடிப்பு வெளிநாட்டில் நவம்பர் மாதம் துவங்குகிறது என்றும் அறிவித்திருக்கிறார்கள். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. தலைவன், அல்லது தலைவர் என்று பெயர் வைக்கலாம் விஜய்யின் பட்டப்பெயரான இளையதளபதி என்பதையே படத்தின் பெயராக வைக்கலாமா? என்றும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து இயக்குனர் விஜய் கூறும்போது "படத்தின் தலைப்பு பற்றி இப்போது யோசிக்கவில்லை. தலைவன் நல்ல தலைப்புதான் ஆனால் அதை இன்னொருவர் பதிவு செய்து வைத்திருக்கிறார். அதனால் தலைப்பு பற்றி யோசித்து வருகிறோம். விஜய் ரசிகர்களுக்கு விருந்து வைக்கிற படமாக இருக்கும் இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்" என்று முடித்துக் கொண்டார்.

முதல் கட்டமாக விஜய் அமலாபால் சம்பந்தப்பட்ட வெளிநாட்டு பாடல் காட்சிகளை படம்பிடிக்க வெளிநாடு போகிறார்கள். படத்துக்காக 5 பாடல்களை தயார் செய்து கொடுத்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி எடிட் செய்யப்போகிறார். பாடல்களை நா.முத்துகுமார் எழுதியுள்ளார். தமிழ் புத்தாண்டில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

விஜய் அண்ட் விஜய் கூட்டணி விண் பண்ணி டிரிபிள் வி ஆகட்டும்...

Tags »
vijay, Amala paul, Director A.L.Vijay, விஜய், அமலாபால், டைரக்டர் ஏ.எல்.விஜய்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (9)

tamil - chennai,இந்தியா
2012-11-02 13:22:48 Report Abuse
 tamil அமலா பால் வேணாம் விஜய்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ram - chennai,இந்தியா
2012-11-02 08:59:44 Report Abuse
 ram அமலபால் ஒரு ஹீரோயனே இல்ல
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ரசிகர் - kodambakkam,குவைத்
2012-11-02 05:26:46 Report Abuse
 ரசிகர் ஏலேய் வெண்ணைகளா உங்க வேலை எதுவோ அதை மட்டும் பாருங்க, சினிமா எடுக்குறவன், நடிகிரவன், டைரக்ட் பண்ணுரவனுக்கு தெரியும் யாருக்கு மார்க்கெட் யாரை போட்டா படம் நல்ல வியாபாரம் ஆகும் என. நீங்க எல்லோரும் மூடிகிட்டு உங்க வேலைய போயி பாருங்க வெண்ணைகளா.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
வேலாயுதம் - chennai,இந்தியா
2012-11-01 13:41:39 Report Abuse
 வேலாயுதம் அவ ரொம்ப திமிர் பிடிச்சவ படம் ஹிட் ஆனா அவல பிடிக்க முடியாது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
வினோத் - Chennai,இந்தியா
2012-11-01 09:36:17 Report Abuse
 வினோத் இயக்குனர் விஜய்க்கு என்ன ஆகிவிட்டது ? அமல புல் ஒரு ஹீரோயன் கிடையாது . அதுவும் நடிகர் விஜய் எப்படி ஒத்து கொண்டார் என்று புரியவில்லை . இதில் இருந்து நடிகர் விஜய்க்கு நல்ல ஹீரோயின்கள் தேர்வு செய்ய திரியாது என்பது நன்றாக புரிகிறது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in