ஷார்மியின் 12 வருடகலை சாதனை | "இந்தியில் நடிக்க நேரமில்லை | ஒரே படத்தில் மூன்று சரவெடி | சகுனம் பார்க்கும்வித்யா பாலன் | நான் கொஞ்சம் விவரமான பொண்ணுங்க...! | "நவ் யு சி மீ | "ஆசை ஆசை, அஜீத், விஜய் ஜோடியாக நடிக்க ஆசை | எனக்கு வீழ்ச்சி அல்ல, வளர்ச்சிதான்! - த்ரிஷா | இயக்குனராகிறார் மாஜி ஹீரோயின் ஸ்ரீப்ரியா! | நயன்தாராவும், டாப்சியும் ரொம்ப குளோஸ் |
ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் நயன்தாரா சீதை வேடத்தில் நடிக்கிறார் என்றதும், அங்குள்ள ஒருசாரர் அந்த வேடத்தில் அவர் நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பிரபுதேவாவை அப்போது அவர் திருமணம் செய்ய தயாரான நேரம் என்பதால், இன்னொருத்தரின் கணவரை அபகரித்திருக்கும் இவர் எப்படி சீதையாக நடிக்கலாம் என்றும் குரல் எழுப்பினர். ஆனால் எதையும் சட்டை செய்யாமல் முழுஈடுபாட்டோடு அந்த வேடத்தில் நடித்தார் நயன்தாரா.
அப்படி அவர் நடித்ததற்கு பலனாக சமீபத்தில் ஆந்திர அரசின் உயரிய விருதான நந்தி விருதே நயன்தாராவுக்கு கிடைத்திருக்கிறது. இதையடுத்து நயன்தாராவின் அபிமானிகள் ஐதராபாத் நகரமெங்கும் நயன்தாரா சீதை கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்களுடன் கூடிய போஸ்டர்களை ஒட்டி அமர்க்களப்படுத்தியிருக்கிறார்களாம். அதைப்பார்த்து நயன்தாரா சீதையாக நடிக்க எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தலைகுனிந்து நடக்கிறார்களாம்.அதில் சிலர், அப்போது பிரபுதேவாவுடன் திருமணம் செய்யயிருந்ததால் அப்படி பேசினோம். இப்போதுதான் நீங்கள் அவரை விட்டே விலகி விட்டீர்களே. அதனால் அந்த வேடத்தில் நடிக்க நீங்கள் தகுதியானவர்தான் என்று நயன்தாராவிடம் சமாதானம் பேசி வருகின்றனர்.