இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சிம்பு நடித்துள்ள, "போடா போடி படத்தில், லத்தீன் அமெரிக்கன் டான்சராக நடித்துள்ளார் வரலட்சுமி. அப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில், சிம்புவோடு இணைந்து போட்டி போட்டு, நடனமாடி கலக்கி எடுத்திருக்கிறார் வரலட்சுமி. இதில், அசந்து போன சிம்பு, "அனைத்து வகையான நடனமும் தெரிந்த ஒரு அற்புதமான நடிகை வரலட்சுமி என்று, அவரை புகழ்ந்து பேசி வருகிறார். இப்படி, "போடா போடியில் வரலட்சுமியின் நடனம் பேசப்பட்டதை அடுத்து, "மதகஜராஜா படத்திலும், ஒரு அதிரடி பாடலில், விஷாலுடன் வரலட்சுமியை ஆட வைத்துள்ளார் சுந்தர்.சி. முதலில் டூயட் பாடலாக ரெக்கார்டிங் செய்த அப்பாடலை, பின்னர் குத்துப்பாட்டாக மாற்றி, செமத்தியாக நடனமாட வைத்திருக்கிறாராம்.