ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
ஆந்திராவில் வெற்றி பெற்ற பவருடு என்ற தெலுங்கு படத்தை ஓ என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்கிறார்கள். இந்த படத்தில் சுமந்த் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். கதாநாயகி, காஜல் அகர்வால். தாதாக்களுக்கும், ஐ.ஏ.எஸ். படிக்கும் ஒரு இளைஞனுக்கும் இடையே நடைபெறும் மோதலை கருவாக கொண்ட படம் இது. நகரில் பதற்றத்தை ஏற்படுத்தும் நிழல் உலக தாதாக்களிடம் அடியாளாக இருக்கிறார், நாயகனின் தந்தை. சமூகத்துக்கு உதவும் நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரியாக விரும்புகிறான், அவருடைய மகன். இந்த சூழ்நிலையில், தாதாக்களால் தந்தை கொல்லப்படுவதை நேரில் பார்த்து வெகுண்டெழுகிறான், நாயகன். அதன்பிறகு நடைபெறும் பரபரப்பான திருப்பங்களே கதை.
சுமந்த்-காஜல் அகர்வால் ஜோடியுடன் நாசர், சுமன், கோட்டா சீனிவாசராவ், ஆலி, பிரம்மானந்தம், பாத்திமாபாபு, பிரகதி ஆகியோரும் நடித்துள்ளனர். மணிசர்மா இசையமைத்து இருக்கிறார். ராஜ் ஆதித்யா இயக்கியிருக்கிறார். சத்யன் - கண்ணன் வசனம் எழுதியிருக்கிறார்கள். சங்கம் நிறுவனம் சார்பில் ஜி.கே.குகன் தயாரித்துள்ளார். படம் டிசம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது