Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எம்.ஜி.ஆரை காப்பாற்றுங்கள்!

28 அக், 2012 - 17:48 IST
எழுத்தின் அளவு:

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உலகம் சுற்றும் வாலிபன் என்ற புகழ்பெற்ற எம்.ஜி.ஆர் படத்தை உல்டா செய்து வாலிபன் சுற்றும் உலகம் என்ற பெயரில் ஒரு படம் வந்தது. உலகம் சுற்றும் வாலிபன் கதையை அப்படியே காப்பி அடித்து எடுத்தார்கள். அதில் நாமக்கல் எம்.ஜி.ஆர் என்பவர் நடித்திருந்தார். இப்போது பி.சக்ரவர்த்தி என்பவர் சக்கரவர்த்தி திருமகள் என்ற எம்.ஜி.ஆர் படத்தின் பெயரை கொஞ்சம் மாற்றி சக்கரவர்த்தி திருமகன் என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்து, நடித்திருக்கிறார்.

அதில் அவரே எம்.ஜி.ஆரைப்போல வேடம் அணிந்து நடித்திருக்கிறார். அவரைப்போல சண்டை போடவும், டூயட்டில் ஆடவும் செய்திருக்கிறார். பார்க்கத்தான் சகிக்கவில்லை. அவர் ஒரு சி.பி.ஐ அதிகாரியாம். குற்றாலத்தில் நடக்கும் மர்ம கொலைகள் பற்றி துப்பறிய வருகிறார். படம் முழுக்க நடக்கிறார். நடக்கிறார் நடந்து கொண்டே இருக்கிறார். அவரையே நினைத்து உருகும் இரண்டு நாயகிகள் வேறு நடிதிருக்கிறார்கள். அவர் படத்தில் உபயோகப்படுத்தியிருக்கும் கோட் சூட்டுக்கான செலவுகூட திரும்ப வரப்போவதில்லை என்று தெரிந்திருந்தும் லட்சக் கணக்கில் செலவு செய்து விளம்பரப்படுத்தியிருக்கிறார்.

பணம் நிறைய இருந்தால் நல்ல இயக்குனர்கள், நல்ல கதைகளோடு வாய்ப்பு தேடி அலைந்து வருகிறார்கள். அவர்களை வைத்து நல்ல படம் எடுக்கலாம். அல்லது நான்தான் நடிப்பேன் என்று நடித்துவிட்டு போகட்டும். மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை விட்டு விடுங்களேன் ப்ளீஸ்... இதுபோன்ற போலி எம்.ஜி.ஆர்களிடமிருந்து புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை காப்பாற்ற வழியே இல்லையா? 

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

ரக்ஹுராமன் - CUDDALORE,இந்தியா
30 அக், 2012 - 08:13 Report Abuse
 ரக்ஹுராமன் புடிங்க சார் அவன புடிச்சு jail ல போடுங்க சார்..
Rate this:
Dhanasekar - puducherry  ( Posted via: Dinamalar Android App )
30 அக், 2012 - 05:58 Report Abuse
Dhanasekar Enna koduma sir idhu....?
Rate this:
prabhu - pudgai,இந்தியா
29 அக், 2012 - 23:00 Report Abuse
 prabhu "அம்மா" கிட்ட கம்ப்ளைன்ட் பண்நிங்க !
Rate this:
மொக்கையன் - chennai,இந்தியா
29 அக், 2012 - 22:55 Report Abuse
 மொக்கையன் பச்ச புள்ள மாதிரி இருக்காருய்யா ! வருங்கால ஜனாதிபதி சக்கரவர்த்தி வாழ்க வாழ்க ....
Rate this:
Karthick - Tirunelveli  ( Posted via: Dinamalar Android App )
29 அக், 2012 - 21:17 Report Abuse
Karthick சினிமா விமர்சகரே முதலில் எங்கள் தலைவர் பற்றிய புத்தகங்கள் படித்த பின்பு பேசவும் நா காக்க காவாக்கால் நா காவு கொடுக்கபடும்
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in