Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

தீபாவளிக்கு 7 படங்கள் ரிலீஸ்!

Diwali 7 films released!இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி 7 படங்கள் ரீலிஸ் ஆகின்றன. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினியின் கோச்சடையான், கமலின் விஸ்வரூபம் படங்கள் தள்ளிப்போகின்றன. பெரிய பட்ஜெட் படமான சூர்யாவின் மாற்றான் தீபாவளி போட்டியில் பங்கேற்காமல் முன்கூட்டியே ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி துப்பாக்கி, கும்கி, போடா போடி, அம்மாவின் கைப்பேசி, கள்ளத்துப்பாக்கி, அஜந்தா, லொள்ளு தாதா பராக்பராக் ஆகிய 7 படங்கள் மட்டுமே தீபாவளிக்கு ரிலீசாவது உறுதியாகியுள்ளது.

துப்பாக்கி’யில் விஜய், காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ளனர். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். மும்பை குண்டு வெடிப்பை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது. போடா போடியில் சிம்பு நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். காதல் கதையாக தயாராகியுள்ளது. கும்கி படத்தில் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு கதாநாயகனாக அறிமுகமாகிறார். பிரபு சாலமன் இயக்கியுள்ளார். யானையை அடக்கும் இளைஞனை பற்றிய கதை. லிங்குசாமி இப்படத்தை தயாரித்துள்ளார்.

அம்மாவின் கைபேசி படம் தாய்க்கும், மகனுக்குமான பாச போராட்டத்தை விளக்கும் கதையம்சம் உள்ள படமாக தயாராகியுள்ளது. தங்கர் பச்சான் இயக்கியுள்ளார். பாக்யராஜின் மகன் சாந்தனு நாயகனாக நடித்துள்ளார். ரவிதேவனின் கள்ளத்துப்பாக்கி திரில்லர் படமாக தயாராகியுள்ளது. லொள்ளு தாதா பராக் பராக் படத்தில் மன்சூர்அலிகான் நாயகனாக நடித்துள்ளார். கந்து வட்டியை மையமாக வைத்து காமெடி படமாக தயாராகியுள்ளது. அஜந்தா படத்தை ராஜ்பா ரவிசங்கர் திருமால் இயக்கியுள்ளனர். காதல் கதையாக தயாராகியுள்ளது.

Tags »
தீபாவளி, 7 படங்கள், ரிலீஸ், Diwali, 7 films, released,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (15)

wan - singapore  ( Posted via: Dinamalar Android App )
2012-10-30 08:31:41 Report Abuse
wan துப்பாக்கி தண்ணீ துப்பாக்கியாதான் இருக்கும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ரக்ஹுராமன் - cuddalore,இந்தியா
2012-10-30 08:18:01 Report Abuse
 ரக்ஹுராமன் துப்பகில நல்ல குண்டு இருக்க , வழக்கம் போல வெடிக்காம போய்ட பொது...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
sekar - selam  ( Posted via: Dinamalar Android App )
2012-10-30 06:36:35 Report Abuse
sekar intha thuppaki thippavali than theriyum ithu kalla thuppakinnu.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
வெற்றி - virudhunagar ,இந்தியா
2012-10-29 18:23:24 Report Abuse
 வெற்றி Im waiting movie for துப்பாக்கி
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Chiranjeevi - Banglore,இந்தியா
2012-10-29 16:11:16 Report Abuse
 Chiranjeevi உடம்புல முக்கியம் கண். இந்த படங்கள்ல முக்கியம் கன் - துப்பாக்கி... am waiting .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in