சினிமாவில் இமேஜ் ரொம்ப முக்கியம்- மாஜி நடிகை ராதா | விஜய்யுடன் டூயட் பாடுவது கனவாகி விட்டது- அருந்ததி புலம்பல் | ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்துக்காக ரத்தம் சிந்திய வழக்கு எண் ஸ்ரீ! | சிம்புவுக்காக கோவா செல்லும் படக்குழு! | 100 நாட்கள் ஓடிய கமல், சசிகுமார் படங்கள்! | விஸ்வரூபம் படம் தொடர்பாக போலி கடிதம் ; கமல் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் நோட்டீஸ் | மதுரை கிராமத்து இளைஞனாகிறார் ஜில்லா விஜய்! | ஊதி பெருத்து விட்டார் பூனம் பாஜ்வா! | ஷாரூக்கான் தயாரிக்கும் இந்தி படத்தில் ப்ருதிவிராஜ்! | புற்று நோயிலிருந்து விடுபட்ட மனீஷாகொய்லாரா மீண்டும் நடிக்க வருகிறார்! |

டைரக்டரும் நடிகருமான சசிகுமார் இயக்கும் படத்தில் நடிகர் சூர்யா நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சசிகுமார் ஏற்கனவே சுப்பிரமணியபுரம் ஹிட் படத்தை இயக்கி பிரபலமானார். நாடோடிகள், சுந்தரபாண்டியன் போன்ற வெற்றிப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது சூர்யாவுக்காக கதை ஒன்றை தயார் செய்து இருப்பதாகவும் அவரும் நடிக்க சம்மதித்து விடடதாகவும் செய்தி பரவியுள்ளது.
இதுகுறித்து சூர்யா அளித்துள்ள பேட்டியில், சசிகுமாரும், நானும் சந்தித்து பேசினோம். கதை பற்றியும் விவாதித்தோம். ஆனால் சசிகுமார் இயக்கத்தில் நடிப்பது பற்றி இன்னும் முடிவாகவில்லை, என்று கூறியுள்ளார். சசிகுமார் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தால் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.