ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
"சாட்டை படத்தில் நடித்த யுவனின் நடிப்பில், அடுத்து, "கீரிப்புள்ள என்ற படம் திரைக்கு வருகிறது. இதையடுத்து, செல்வபாரதி இயக்கத்தில், "காதலை தவிர வேறொன்றுமில்லை இராசு மதுரவன் இயக்கத்தில், "சொகுசு பேருந்து உட்பட, மூன்று படங்களில் நடிக்க உள்ளார் யுவன். இந்த படங்களில், ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுக்க இருப்பதாக சொல்லும் யுவன், புரூஸ்லீயின் தீவிர ரசிகராம், "அவர் நடித்த பல படங்கள் எனக்கு பிடிக்கும். அதனால், அவர் பாணியில் சண்டைக் காட்சிகளில் நடிப்பேன் என்று சொல்லும் யுவனுக்கு, குங்பூ, கராத்தே போன்ற கலைகள், அத்துபடியாம். ஒரு சிறந்த ஆக்ஷன் ஹீரோவாக வரவேண்டும் என்பதற்காக, 10 வயதில் இருந்தே, அனைத்து வகை சண்டைப் பயிற்சிகளையும் எடுத்து வந்ததாக சொல்கிறார்.