Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

மாற்றான் ஸ்கேன்களை கேட்கிறார் சூர்யா

Surya asking maatran scanning technology
சமீபத்தில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கும் படம் மாற்றான். இதில் சூர்யா, காஜல் அகர்வால் நடித்துள்ளனர். கே.வி.ஆனந்த் இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் சூர்யா ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரர்களாக நடித்துள்ளார். இதில் அகிலன், விமலன் என்ற இரண்டு கேரக்டர் வரும். இதில் அகிலன் கேரக்டரில்தான் சூர்யா படப்பிடிப்பில் நடித்தார். விமலன் கேரக்டரில் வேறொருவர் நடித்தார். பின்னர் சூர்யா புளூமெட் முறைப்படி தனியாக விமலன் கேரக்டரில் நடித்து அது ஏற்கெனவே நடித்தவர் மீது தொழில்நுட்ப ரீதியாக பேஸ்ட் செய்யப்பட்டது. இதில் துல்லியமான லைட்டிங், துல்லியமான முகபாவம் வரவேண்டும் என்பதற்காக ஒரு நவீன முறையை கையாண்டார்கள்.

இது அவதார் படத்தில் ஜேம்ஸ் கேரூன் பயன்படுத்தியது. லைட்டிங் பால் என்ற முறையில் இது சாத்தியமானது. ஒரு ராட்சத பந்து போன்ற அமைப்பில் 360 டிகிரி கோணத்திலும், லைட்டிங் செய்யப்பட்டு 360 மினி கேமராக்கள் வைக்கப்பட்டிருக்கும், இதன் நடுவில் நின்று சூர்யா பல்வேறு விதமான உணர்வுகளை காட்டினார், மகிழ்ச்சி, துக்கம், அழுகை, ஆச்சர்யம், இப்படி விதவிதமாக செய்தார். அவை அனைத்தும் 360 டிகிரி கோணத்திலும் ஸ்கேன் செய்யப்பட்டது.

இந்த ஸ்கேனை வைத்துக் கொண்டு சூர்யா போன்ற அனிமேஷன் படங்களை உருவாக்க முடியும், அவ்வளவு ஏன் சூர்யா கால்ஷீட் கிடைக்காவிட்டால் அவர் நடிப்பது போன்ற படத்தையே எடுத்துவிட முடியும். இந்த ஸ்கேன்கள் தவறானவர்கள் கையில் கிடைத்தால் சூர்யா நடிப்பில் எந்தப் படத்தையும் எடுத்து விட முடியும். அதனால்தான் ஹாலிவுட் நடிகர்கள் இந்த 360 டிகிரி ஸ்கேனுக்கு ஒத்துக் கொள்வதில்லை. இப்போது மாற்றான் படம் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இந்த தொழில்நுட்பங்கள் வெளியில் தெரியத் தொடங்கி விட்டன. அதனால் சூர்யா தனது தொடர்பான அனைத்து ஸ்கேன்கள், மற்றும் சாப்ட்வேர்களை கேட்டுள்ளார். அதை மொத்தமாக அவரிடம் கொடுக்கும் வேலைகளை அமெரிக்க நிறுவனம் செய்து வருகிறது.

எம்.ஜி.ஆர் காலத்தில் இப்படி ஒரு வசதி இருந்தால்... தலைவரை வைத்து இப்போதும் வெற்றிப்ப படங்களை எடுத்துக் கொண்டிருந்திருக்கலாமே...!!

Tags »
Surya, Maatran, சூர்யா, மாற்றான்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (13)

bala - Singapore  ( Posted via: Dinamalar Android App )
2012-10-27 14:14:20 Report Abuse
bala அண்னா மாற்றான் படம் நல்ல இருக்குனா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Jeeva - Chennai  ( Posted via: Dinamalar Android App )
2012-10-27 11:27:40 Report Abuse
Jeeva Its perfomance capture not motion capture. Live a life.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
ராஜா - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
2012-10-27 10:25:32 Report Abuse
 ராஜா ஸ்கேன் மட்டும் இல்ல படதையே திரும்ப வாங்கி வீட்டுல வை மாற்றான் படம் நல்லா illaa
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
tamil - chennai,இந்தியா
2012-10-26 16:44:23 Report Abuse
 tamil ஸ்கேன் மட்டும் இல்ல படதையே திரும்ப வாங்கி வீட்டுல வை
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
கார்த்திக் - Bangalore,இந்தியா
2012-10-26 14:45:20 Report Abuse
 கார்த்திக் இந்த தொழில்நுட்பம் பெயர் தான் motion capture டெக்னாலஜி. இதை தான் சூப்பர்ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தில் பயன்படுத்தபடுகிறது. ரஜினியின் காலத்திற்கு பிறகும், அந்த தொழில்நுட்பத்தை வைத்து பல புது ரஜினி படங்கள் எடுக்கலாம்!!
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in