மலையாளத்தில் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்தி புதிய படம்! | நீச்சல் குளத்தில் வழுக்கி விழுந்த ஸ்ருதிஹாசன்! | சித்தார்த்துக்காக கவுரவ வேடத்தில்நடிக்கிறார் சமந்தா? | புதிதாக பிறந்தேன் மனிஷா உருக்கம் | அஞ்சலியின் அதிரடி அமலா ஆவேசம் | நான் தான் நம்பர் ஒன்உற்சாகத்தில் தமன்னா | விஜய் ஜோடியாக நடிப்பேன்பூர்ணா சபதம் | போட்டி இருந்தால் தான்சாதிக்க முடியுமாம் | விஷால் மீது நடவடிக்கை இல்லை! - நடிகர் சங்கம் | மாமனாருக்கு பதில் மருமகனை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்!! |

பொதுவாக பாடல் காட்சிகளில் அல்லது கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளில் ஹீரோவுடன் முத்தம் கொடுத்தபடி நடிக்க வேண்டும் என்று இயக்குனர்கள் சொன்னாலே ரொம்பவே அலட்டிக்கொள்வார்கள் நடிகைகள். ஆனால் நீர்ப்பறவை படத்தில் விஷ்ணு-சுனைனா இருவரும் ஒரேயொரு பாடலில் ஏராளமான முத்தங்களை கொடுத்தபடி நடித்திருப்பதை அடுத்து முத்தம் கொடுத்து நடிப்பது கோடம்பாக்கத்தில் சாதாரண விஷயமாகி விட்டது.
அதனால் இதுவரை முத்தக்காட்சி என்றாலே, வெடிகுண்டு சமாச்சாரம் போல் அறிய வந்த அஞ்சலியும் இப்போது மாறத் தொடங்கி விட்டார். ஆர்யாவுடன் நடித்து வரும் சேட்டை படத்தில் அப்படியொரு காட்சி உள்ளது என்று முதலில் இயக்குனர் கண்ணன் சொன்னபோது மறுத்த அஞ்சலி, இப்போது அந்த காட்சியில் நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறாராம். இதனால் ஏற்கனவே அதே படத்துக்காக ஹன்சிகாவுடன் கிளுகிளுப்பான முத்தக்காட்சியில் நடித்து விட்ட ஆர்யா, இப்போது அஞ்சலியின் சூடான முதல் முத்தத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்.