Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வடிவேலு படத்துக்கு தயாரிப்பாளர் கிடைக்காத பரிதாபம்!

22 அக், 2012 - 17:33 IST
எழுத்தின் அளவு:

ஒரு காலத்தில் வடிவேலு நடித்திருக்கிறார் என்று சொன்னால் உடனடியாக அந்த படம் வியாபாரமாகி விடும். அப்படி தான் நடிக்கிற படங்களின் வியாபாரத்தை நிர்ணயித்து வந்தார் வடிவேலு. ஆனால் அரசியல் பிரவேசம், விஜயகாந்துடன் மோதல் போன்ற சம்பவங்கள் அவர் வாழ்க்கையில் நடைபெற்ற பிறகு மார்க்கெட்டே தலைகீழாகி விட்டது. வடிவேலுவுக்கு படம் கொடுத்தால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்படும் என்று பயந்து அவருக்கு வேண்டப்பட்டவர்களே அவரை கழட்டி விட்டனர். இதனால் வருடக்கணக்கில் படமே இல்லாமல் மதுரைக்கும், சென்னைக்கும் பறந்தபடி பொழுதை கழித்து வருகிறார் வைகைப்புயல்.

இந்த நிலையில், கடந்த ஆறு மாதமாக சிம்புதேவன் இயக்கத்தில் ஏற்கனவே நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் வடிவேலு நடிப்பது போலவும், அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. இதுபற்றி விசாரித்தபோது, சிம்புதேவன் படத்தில் வடிவேலு நடிப்பதில் ஆர்வமாக உள்ளார். அதேபோல், புதுமுக டைரக்டர் ஒருவர் சொன்ன தெனாலிராமன் என்றொரு கதையிலும் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார். ஆனால் இந்த கதைகளில் வடிவேலுவை வைத்து படமெடுக்கத்தான் எந்த தயாரிப்பாளர்களும் முன்வரவிலலையாம். இருப்பினும் தொடர்ந்து திரைக்குப்பின்னால் தீவிர முயற்சிகள் மட்டுமே நடந்து வருகிறதாம்.

Advertisement
கருத்துகள் (29) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (29)

Pradeep - Chennai,இந்தியா
24 அக், 2012 - 11:22 Report Abuse
 Pradeep திமிரு தலைக்கு ஏறுனா இப்படித்தான்.... "ரானா-வாது கானா-வாது" னு எப்போ ரஜினிகாந்த் படத்தையே கிண்டல் செய்தாரோ அப்பொழுதே இவரை ஒதுக்க வைக்கிற நேரம் வந்தாச்சு ..... இது வரை ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லை ரஜினி ரசிகர்களிடம்....
Rate this:
karthik - madurai,இந்தியா
20 ஆக, 2013 - 15:38Report Abuse
karthikவடிவேல் பேசும் நகைச்சுவையை மட்டும் ரசிகிரிங்க ஆனா அவர் தெரியாமல் செய்த தப்பை மட்டும் ஏன் பெருசு படுதுரிங்க பாவம் வடிவேல் அவருக்கு நாம சப்போர்ட் பண்ணாமல் வேற யாரு சப்போர்ட் பண்ணுவா.மன்னிகிரவங்கதா கடவுள்னு சொல்லுவாங்க ப்ளீஸ் மறப்போம் மன்னிப்போம்...
Rate this:
கரீட்டு - Karumaathoor,கிரிகிஸ்தான்
24 அக், 2012 - 03:21 Report Abuse
 கரீட்டு சொக்கப்பரய் சோதிக்காதீங்க, சோகாப்பர் அப்படின்னு அழகா ஒழுங்கா எழுதுங்கோ.
Rate this:
வேலு - velan city,வாடிகன் சிட்டி
23 அக், 2012 - 20:56 Report Abuse
 வேலு ஏலேய் கொக்கா மக்கா அது சொக்கப்பர் இல்லை சோகாப்பர், ஏனிந்த கொலை வெறி என் ஐயன் வள்ளுவன் குறள் மீது, யாராவது நீ குறள் எழுதலை அப்படின்னு அழுதாங்கலாலேய்.
Rate this:
வா. ஸ்ரீனிவாசன் - CHENNAI,இந்தியா
23 அக், 2012 - 19:17 Report Abuse
 வா. ஸ்ரீனிவாசன் வடிவேலு அவர்கள் மட்டும் அல்ல யாராக இருந்தாலும் சரி தனது சொந்த பிரச்சினைக்கு அரசியலை அல்லது அரசியல்வாதிகளை நம்பினால் அது தேவையில்லாத துன்பத்தைத்தான் தரும். வடிவேலு அவர்களின் திறமை பற்றி யாருக்கும் இரண்டாவது கருத்து இருக்க முடியாது. மறப்போம் மன்னிப்போம் என்பதுதான் இரண்டு முக்கிய கட்சிகளுக்கும் முன்னோடியான பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கை. எனவே பட அதிபர்கள் சம்மந்த பட்டவர்களிடம் (தேவைப் பட்டால்) பேசி மீண்டும் வடிவேலு அவர்களை நடிக்கவைத்து திறமைக்கு என்றும் மரியாதை உண்டு என்பதை நிரூபிக்க வேண்டும். நன்றி. வடிவேலு அவர்களுக்கு... இது அறிவுரை அல்ல ஆதங்கம் தயவு செய்து இனி உங்கள் பணி நடிப்பு நடிப்பு நடிப்பு மட்டுமே என்றுணர்ந்து மென்மேலும் பல வெற்றிகளை காணவேண்டும்.
Rate this:
விஜய் - chennai,இந்தியா
23 அக், 2012 - 16:02 Report Abuse
 விஜய் அவ அவ கஷ்டம் அவ அவ கு.
Rate this:
மேலும் 23 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in