ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலிவுட் ரசிகர்களால்,"கிங் கான்என்ற செல்லப் பெயருடன் அழைக்கப்படும் ஷாரூக்கான், சின்னத் திரையிலிருந்து, வெள்ளித் திரைக்கு வந்தவர். கடந்த, 20 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தி திரையுலகின், முன்னணி நடிகராக, அசைக்க முடியாத செல்வாக்குடன் திகழ்கிறார். மாதுரி தீட்ஷித், கஜோல், ப்ரீத்தி ஜிந்தா, ராணி முகர்ஜி உள்ளிட்ட பல நடிகைகள், ஷாரூக்கிற்கு ஜோடியாக நடித்துள்ளனர்.
சமீபத்தில், "ஷாரூக்கிற்கு பொருத்தமான ஜோடி யார் என, ஆன்-லைனில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில், கத்ரீனாவுக்கும், அனுஷ்கா சர்மாவுக்கும் இடையே, கடும் போட்டி நிலவியது. இறுதியாக, அனுஷ்கா சர்மாவை பின்னுக்கு தள்ளி விட்டு, "ஷாரூக்கிற்கு பொருத்தமான ஜோடி என்ற பட்டத்தை, கத்ரீனா தட்டிச் சென்றார். அனுஷ்காவுக்கு 48 சதவீத ஓட்டுகளும், கத்ரீனாவுக்கு 51 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன. "ஷாரூக்கான் நடிக்கும், "ஜாப் டக் ஹை ஜான்என்ற படம், விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதில், அவருக்கு ஜோடியாக, கத்ரீனாவும், அனுஷ்கா சர்மாவும் நடித்துள்ளனர். இந்த படத்தை விளம்பர படுத்துவதற்காகவே, இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது என்கின்றன, பாலிவுட் வட்டாரங்கள்.