Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

தாய் - மகனின் உண்மையான பாசத்தை வெளிகொண்டு வந்த ஜோஸ் ஆலுக்காஸ் விளம்பரம்

Jos Alukkas shows mother-sons real love விஜய்யுடன் சேர்ந்து நடித்து ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு எனது மகன் விஜய்யை மடியில் கிடத்தி கொஞ்சி மகிழும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு என் நன்றிகள் என விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், தனது படவேலைகளுக்கு மத்தியிலும் பல்வேறு விளம்பர படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் விளம்பர தூதராகவும் இருக்கிறார்.

இந்நிலையில் விஜய்யும், அவரது அம்மாவும் பாடகியுமான ஷோபா சந்திரசேகர் இருவரும் முதன்முறையாக ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தின் புதிய விளம்பரத்தில் தோன்றி நடித்துள்ளனர். விஜய், தனது அம்மா ஷோபா சந்திரசேகரின் மடியில் படுத்தபடி பாசத்தை பொழிவது போன்றும், ஷோபாவும் விஜய் மீது பாசத்தை பொழிவது போன்றும் அந்த விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது. ரொம்ப தத்ரூபமாக எடுக்கப்பட்டுள்ள இந்த விளம்பரம் மக்களிடம் வெகு சீக்கிரத்தில் ரீச்சாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் இந்த விளம்பரம் வெளியாகிறது.

இந்த விளம்பரத்தில் நடித்ததை ரொம்ப பெருமையாக கருதுகிறார் ஷோபா. இதுகுறித்து அவர் மகிழ்ச்சி பொங்க கூறியிருப்பதாவது, சின்ன வயதில் எனது மகனை (விஜய்) மடியில் கிடத்தி கொஞ்சி மகிழ்ந்தது உண்டு. இப்போது பெரிய ஸ்டாராகிவிட்டதால் நிற்க கூட நேரமின்றி ஷூட்டிங் ஷூட்டிங் என்று ஓடிக்கொண்டு இருக்கிறார். அப்படி இருக்கையில், பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் எனது மகனை, எனது மடியில் கிடத்தி கொஞ்சி மகிழும் வாய்ப்பு கிடைத்தது. 2 நாளும் எனது மகனுடன் சேர்ந்து நடித்து, அவனுடன் கொஞ்சி மகிழ்ந்தது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இப்படி ஒரு சந்தர்ப்பந்தை ஏற்படுத்தி கொடுத்த ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு எனது நன்றிகள் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டவுடன் உணர்ச்சி வசப்பட்டு அழுதே விட்டார் ஷோபா. ஷூட்டிங் ஷூட்டிங் என்று விஜய் பிஸியாக இருந்ததால் அவருடன் அதிக நேரம் செலவிட முடியவில்லையாம் ஷோபாவுக்கு. நீண்ட நாட்களுக்கு பிறகு அப்படி ஒரு வாய்ப்பு அமைந்ததால் உணர்ச்சிவசப்பட்டு அழுததாக ஷோபா கூறியுள்ளார்.

Tags »
Jos Alukkas, Vijay, Shoba chandrasekar, ஜோஸ் ஆலுக்காஸ், விஜய், ஷோபா சந்திரசேகர்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (60)

நல்ல thambi - ambur,இந்தியா
2012-10-25 12:09:53 Report Abuse
 நல்ல thambi நல்ல பிசினஸ் டா விஜய்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
bl - madras,இந்தியா
2012-10-23 07:08:09 Report Abuse
 bl இது நகை விளம்பரமா அல்லது தாய் பாசம் என்றால் என்னனு காட்டுற விளம்பரமா.விதம் விதமா நகைகளை காட்டினாள் வியாபாரம் நடக்கும்.இதுங்கமூஞ்ச காட்டினா யார் நகை வாங்குவாங்க.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
nagaraj - bangalore,இந்தியா
2012-10-23 01:20:44 Report Abuse
 nagaraj எச்சலன்ட் அட்வர்டிசெமென்ட் depicting thhai பாசம் ஹடோப்ப் ஜாய் alikkas
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Nifras - Pottuvil,இலங்கை
2012-10-23 00:12:55 Report Abuse
 Nifras Super thalaiva i love u
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
பயில்வான் - mdu,இந்தியா
2012-10-22 18:43:06 Report Abuse
 பயில்வான் எத்தனை கோடி வாங்குனீங்க அம்மா ???? அடுத்த விளம்பரம் விஜய் தன் அப்பாவின் தோளில் உக்காந்து அவரு மூக்கை கிள்ளுற மாதிரி எடுங்க ப்ளீஸ்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 55 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in