பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழ் படம் இயக்கிய சி.எஸ்.அமுதனிடம் உதவியாளராக இருந்தவர் கிருஷ்ணன் ஜெயராஜ். இவர் சொன்னா புரியாது என்ற படத்தின் மூலம் இயக்குனராகிறார். மெர்ச்சி சிவாதான் ஹீரோ. வசுந்தரா காஷ்யப் ஹீரோயின். பிளேடு சங்கர், சிங்கமுத்து, ஆர்.எஸ்.சிவாஜி என்ற காமெடி பட்டாளம் நடிக்கிறது.
திருமணம் என்றாலே அலறி அடித்து ஓடுபவர் சிவா. அவருக்கு எப்படியாவது திருமணம் செய்து வைத்து விடவேண்டும் என்று துடிப்பவர்கள் நண்பர்களும், பெற்றோர்களும். இவர்களுக்குள் நடக்கும் காமெடி ஆட்டம்தான் படம். சிவா ஏன் திருமணத்தை வெறுக்கிறார் என்று யாருக்கும் சொன்னா புரியாது. அதனாலதான் படத்தின் தலைப்பு அப்படியாம். சென்னை, கோபிசெட்டி பாளையம் பகுதிகளில் படப்பிடிப்பு முடிந்துள்ளது. நீரவ்ஷா உதவியாளர் சரவணன் ஒளிப்பதிவு, யதீஷ் மகேஷ் இசை அமைக்கிறார்.
சிரிப்புவெடிய தீபாவளிக்கு கொழுத்திப்போடுங்க பாஸ்...