Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினிக்கு பிறகு விஜய்யிடம் அந்த மனப்பாங்கு உள்ளது! - நெகிழ்கிறார் தாணு!!

17 அக், 2012 - 17:38 IST
எழுத்தின் அளவு:

பிரமாண்டங்களுக்கு முதலில் பேசப்படும் பெயர் தயாரிப்பாளர் எஸ்.தாணு. விளம்பரங்களுக்கு அவர் கொடுத்த முக்கியத்துவம் இன்று வரை யாராலும் முறியடிக்கப்படவில்லை. யார் படத்தில் தொடங்கி இப்போது வெளிவர இருக்கும் துப்பாக்கி படம் வரை அவரது பிரமாண்டம் தொடர்கிறது. ஆனால் இவருக்கும் இடையில் சில சறுக்கல்கள் வந்தன. இருந்தும் அதை எல்லாம் முறியடித்து இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு துப்பாக்கி படம் மூலம் களம் இறங்கி இருக்கிறார். துப்பாக்கி படத்தை பற்றி பல செய்திகள் வந்தாலும், அதில் நடித்த விஜய் பற்றியும், அவர் செய்த உதவியை பற்றி தான் இன்றைய கோடம்பாக்கம் முழுவதும் ஒலித்து கொண்டு இருக்கிறது. அப்படி என்ன செய்தார் விஜய் என்று கேட்கிறீர்களா...?

துப்பாக்கி படம் துவங்கிய பிறகு தாணு அவர்களுக்கு நிதி நெருக்கடி வந்ததாம். எங்கே தன்னை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர் பணப்பிரச்னையில் சிக்கி ஷூட்டிங் நின்றுபோய்விடுமோ என்று நினைத்த விஜய், தாணுவின் நிலையை புரிந்து கொண்டு அவரை வரவழைத்து ரூபாய் எதுவும் நிரப்பப்படாத காசோலை ஒன்றை கொடுத்து எவ்வளவு வேண்டுமோ எடுத்து கொள்ளுங்கள் என்றாராம். இதை சற்றும் எதிர்பார்க்கவில்லையாம் தாணு.

இதுப்பற்றி தாணுவிடம் கேட்டபோது, சிவாஜி படத்தில் ரஜினி நடித்த போது வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே வாங்கி கொண்டு நடித்தார். படம் வெளிவந்து வெற்றி பெற்ற பிறகுதான் தனக்குரிய சம்பளத்தை பெற்றுக்கொண்டார். அந்தளவுக்கு ஒரு தயாரிப்பாளரின் கஷ்டத்தை உணர்ந்தவர் ரஜினி. அவருக்கு பிறகு விஜய்யிடம் அந்த மனப்பாங்கு இருக்கிறது. ரஜினி ரூபத்தில் விஜய்யை பார்க்கிறேன் என்று நெகிழ்கிறார்.

Advertisement
கருத்துகள் (42) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (42)

வா. ஸ்ரீனிவாசன் - CHENNAI,இந்தியா
01 டிச, 2012 - 11:56 Report Abuse
 வா. ஸ்ரீனிவாசன் பைரவி பட விளம்பரம் மூலம் ரஜினிக்கு சூப்பர் ஸ்டார் பட்டதை சூட்டியவரே இந்த 'கலைப்புலி' தாணு சார்தான் ஆனால் ரஜினி சார் இவருக்கு ஒருபடம் பண்ணித்தரவில்லையே என்று கொஞ்சமும் பீல் பண்ணாமல் ரஜினி சாரை பாராட்டும் 'கலைபுலி' தாணு அவர்கள் இன்னும் பல வெற்றிகளை பெற இறைவனிடம் வேண்டுவோம்.
Rate this:
தினா - tirupur,இந்தியா
30 நவ, 2012 - 15:37 Report Abuse
 தினா சூப்பர்-டா தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சினை இதுதான் . நல்ல சண்ட போடுங்கடா முட்டா பசங்களா போங்கடா போய் பொழப்ப பாருங்கடா
Rate this:
சதீஷ் kumar - banglore,இந்தியா
29 நவ, 2012 - 09:52 Report Abuse
 சதீஷ் kumar எந்த படம் எடுத்தாலும் ஓகே சுமாரா இருக்கு பிளாப் அப்டின்னு கமென்ட் கொடுக்குறீங்க. அஜீத் விஜய்க்கு போன் பண்ணி படம் நல்லா இருக்கு. கலக்கிடீங்க அப்டின்னு சொல்லிருக்காரு. நீங்க ஏன் அடிச்சுக்கறீங்க. அவன் மொக்க இவன் மொக்க அப்டின்னு சொல்றத விட்டுட்டு படத்த பாத்தோமா பொழப்ப பாதொமான்னு இருங்க. உங்கள நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
Rate this:
rravi - dubai,இந்தியா
28 நவ, 2012 - 22:22 Report Abuse
 rravi Bajaji அஜித் விஜய் ரெண்டு பேரும் நண்பர்கள் நீங்க ஏண்டா அடித்து தொலையறீங்க
Rate this:
nallu - manapparai,இந்தியா
28 நவ, 2012 - 17:59 Report Abuse
 nallu மொக்கை படத்துக்கு இவ்வளவு பில்டப்பா? ஏன் பா விஜயை பெரிய ஆளாக்கி விடுறீங்க? ஹி இஸ் ஒன் ஆப் தி மொக்கை அக்டர் இன் தமிழ் பிலிம். சரியா?
Rate this:
மேலும் 37 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in