Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

அரசியல்வாதி ஆக நினைத்தேன்! டைரக்டர் முருகதாஸ் பேச்சு!!

I wants to become a politician says A.R.Murugadossதவறுகளை தட்டிக்கேட்பதற்காக அரசியல்வாதி ஆகலாம் என நினைத்தாக டைரக்டர் முருகதாஸ் கூறினார். திருச்சியில் பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் கலந்து கொண்டார். மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், நான் இந்த கல்லூரியில்தான் படித்தேன். படிக்கும்போது மிகவும் தாழ்வு மனப்பான்மையுடன் இருந்தேன். ஆனால் 3 ஆண்டு கல்லூரி வாழ்க்கையில் 30 ஆண்டு அனுபவம் பெற்றேன். நான் பார்த்த முதல் நகரம் திருச்சி. கல்லூரி படிப்பு காலத்தில் எனக்குள் இருந்த கூச்சம் எங்கே போனது என்று தெரியவில்லை. தவறுகளை தட்டிக்கேட்கும் மனநிலை எனக்குள் உருவானது. தவறுகளை எதிர்த்து எப்படி போராடுவது என்று தெரியாத நிலை. எனவே ஒரு நக்சலைட்டாகவோ, அல்லது அரசியல்வாதியாகவோ ஆகலாமா? என்று கூட நினைத்தேன்.

2-ம் உலகப்போரை நிறுத்தியது, அலறியபடி ஆடையின்றி ஓடி வந்த ஒரு சிறுமியின் புகைப்படம்தான். ஒரு புகைப்படம் ஒரு போரை நிறுத்தும் அளவுக்கு வலிமை படைத்தது என்றால், திரைப்பட துறையின் மூலம் சமுதாய பணி செய்யலாம் என்ற எண்ணத்தில் நான் திரைப்பட துறையில் நுழைந்தேன். எனது படங்களில் சமுதாய சீர்கேடுகளை சீர்திருத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் காட்சிகள் இடம்பெற வைத்து வருகிறேன். எனது ரமணா படத்தில் காட்டியவாறு மாணவர்கள் எந்த துறையில் இருந்தாலும் நல்லது செய்ய வேண்டும். ஊதியத்துக்கு பணி செய்வதை மட்டுமே லட்சியமாக கொள்ளாமல் சமுதாய கடமைகளையும் ஆற்ற முன்வர வேண்டும், என்றார்.

Tags »
A.R.Murugadoss, ஏ.ஆர்.முருகதாஸ்,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (15)

எ.SAHABUDEEN - Trichy,இந்தியா
2013-01-22 23:02:25 Report Abuse
 எ.SAHABUDEEN நீங்கள் சமுதாய சீர்திருத்த படங்களுக்கு காசு வாங்காமல் தான் இயக்குகிறீர்களா? மைக் கிடைத்தால் எதை வேண்டுமானாலும், பேசிவிடுவீர்களா? இவர் படம் எடுக்க இல்லை என்றால் சமுதாயமே கெட்டு சீரழிந்துவிடும், இந்த லச்சனத்தில் இவர் வரலாறு பாடத்தில் பட்டம் பெற்றவர், மன்னிப்பு எனக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை என்று வசனம் எழுதிவிட்டு, என் சமுதாய மக்களிடம் தன் தரங்கெட்ட படத்திற்காக மன்னிப்பு கேட்கிறார், இதை விட கேவலம் ஒன்றும் இல்லை முருகதாஸ், படம் எடுப்பதிர்க்கு முன்பு உருப்படியான(உண்மையான) வரலாறை தெரிந்துகொண்டு, யாருடைய மனமும் புண்படாதபடி படம் எடுங்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
balaji - madurai,இந்தியா
2013-01-10 23:28:18 Report Abuse
 balaji நான் முருகதாஸ் அவர்களை தொடர்பு கொள்ள உதவி செய்யவும் .மிக்க நன்றி
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
பாண்டி - madurai,இந்தியா
2012-10-16 10:16:57 Report Abuse
 பாண்டி என்ன பிக்காளித்தனமான பேச்சா இருக்கு. லூசுத்தனமா அல்ல இருக்கு. சம்பளத்த பத்தி நெனைக்காம எப்படி வேலை பாக்குறது? மைக்க கைல குடுத்தா மனம்போன போக்கில ஓலரலாமா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
பிலால் - Doha ,கத்தார்
2012-10-15 10:13:14 Report Abuse
 பிலால் 7 ஆம் ariyu வேலை செய்யுதோ? கொஞ்சம் பார்த்து பேசுங்க மறுபடியும் POTA வந்தாலும் வரும். 8 ஆம் ARIYU எப்ப வரும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Prem - Bangalore,இந்தியா
2012-10-15 09:28:56 Report Abuse
 Prem தலைகனம் பணம் சேர்ந்தால் என்ன வேண்டும் என்றாலும் பேச முடியும் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் இதுவே ;-)
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in