துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் |
கீதாலயா மூவிஸ் தயாரிப்பில், வேலு விஸ்வநாத் இயக்கியுள்ள படம், வெள்ளச்சி. நடிகர் பாண்டுவின் மகன், பிண்டு நாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில், கேரள வரவு சுசித்ரா உன்னி, நாயகியாக நடித்துள்ளார். பாரதிராஜா இயக்கிய, "கருத்தம்மா படத்துக்கு இணையாக, ஒரு அழுத்தமான காதல் கதையில், இப்படம் உருவாகியிருப்பதாக சொல்லும் இயக்குனர் வேலு விஸ்வநாத், "நிஜமாக காதலிப்பவர்கள், தங்கள் காதலை மறைப்பதால் ஏற்படும் விபரீத விளைவுகளே இப்படம் என்கிறார். "அழுத்தமான, சீரியசான கதைக்களம் என்றாலும், இன்றைய ரசிகர்களை மனதில் வைத்து, காமெடி கலந்து, ஜனரஞ்சகமாக கதையை நகர்த்தியுள்ளேன். "பருத்திவீரன், மைனா போன்று, இப்படத்தின் கிளைமாக்சும் பேசப்படும் வகையில் இருக்கும் என்று சொல்லும் இயக்குனர், "இப்படத்தில் இன்னொரு "ஹைலைட் பவதாரிணியின் அற்புதமான இசை என்கிறார்.