கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! | நஸ்ரியாநசீமுக்கு தமிழ் வசனங்களை புரிய வைத்த ஜெய்! | சீரியலிலும் புரட்சி செய்யப்போகிறார் பாரதிராஜா! |
அழகிய தீயே, சிந்தனை செய், பட்டியல், செம்பட்டை உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகர் திலீபன் (32) இன்று திடீர் என்று காலமானார். திலீபனின் உண்மையான பெயர் பாலா. அழகிய தீயே படத்தில் பிரசன்னாவின் நண்பன் கதாபாத்திரத்திலும், சிந்தனை செய் படத்தில் ஐந்து ஹீரோக்களில் ஒருவராகவும் நடித்திருக்கும் திலீபன் கூத்துப்பட்டறை மாணவராவார். சமீபத்தில் வெளியான செம்பட்டை என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். திருமணம் ஆகாத இவர் சென்னை, வடபழனியில் உள்ள கங்கை அம்மன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.கடந்த சில தினங்களுக்கு முன் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவருடைய நண்பரின், சொந்த ஊரான மதுரை வத்திராயிருப்புக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திலீபனுக்கு மஞ்சள் காமாலை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நோய் முற்றி இருந்த நிலையில் மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலன் இன்றி திலீபன் இன்று (அக்.12) காலமானார். அவருடைய உடல் சொந்த ஊரான பட்டுக்கோட்டை, ஒரத்தநாடுக்கு அருகில் உள்ள பழவங்காடு கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதி சடங்கு நடக்கிறது. சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் சென்னைக்கு வந்த திலீபன், கூத்துப்பட்டறையில் பயின்று, பிறகு படங்களில் நடிக்க தொடங்கிய அவருக்கு இரண்டு தம்பிகளும், ஒரு அக்காவும் உள்ளனர்.
கடுமையாக உழைத்து முன்னேறி வந்த ஒரு இளைஞர் தனது இளவயதி்லேயே மரணிப்பது என்பது மிக மிக கொடுமையான ஒரு சம்பவம் நிறைய இளைஞர்கள் தன் குடும்பத்தை நேசிக்கும் அளவில் கால்வாசி பங்கு கூட தன் உடல்நலனை பற்றி சிந்தி்ப்பது இல்லை இந்த உண்மையை அனைவரும் உணர்ந்து இன்றைய இளைஞர்களை காப்பாற்ற வேண்டுகிறேன் நானும் இதேபோல எனது சகோதரனை இழந்தவன் தான் சற்குணம் சிங்கப்பூர்