Advertisement

சிறப்புச்செய்திகள்

சிங்கம்-2 ஆடியோ விழாவில் மேலும் மூன்று சிங்கங்கள்! | அஜீத், சூர்யா படங்களுக்கு ரூட் விடும் அமலாபால்! | பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே |

சினிமா முதல் பக்கம் » கோலிவுட் செய்திகள் »

செம்பட்டை படத்தின் நடிகர் திலீபன் காலமானார்!

Cemppattai  film actor Thileepan passed away!அழகிய தீயே, சிந்தனை செய், பட்டியல், செம்பட்டை  உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகர்  திலீபன் (32)  இன்று திடீர் என்று காலமானார். திலீபனின் உண்மையான பெயர் பாலா. அழகிய தீயே படத்தில் பிரசன்னாவின் நண்பன் கதாபாத்திரத்திலும், சிந்தனை செய் படத்தில் ஐந்து ஹீரோக்களில் ஒருவராகவும் நடித்திருக்கும் திலீபன் கூத்துப்பட்டறை மாணவராவார். சமீபத்தில் வெளியான செம்பட்டை என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். திருமணம் ஆகாத இவர் சென்னை, வடபழனியில் உள்ள கங்கை அம்மன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.கடந்த சில தினங்களுக்கு முன் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவருடைய நண்பரின், சொந்த ஊரான மதுரை வத்திராயிருப்புக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திலீபனுக்கு மஞ்சள் காமாலை நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நோய் முற்றி இருந்த நிலையில் மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலன் இன்றி திலீபன் இன்று (அக்.12) காலமானார். அவருடைய உடல் சொந்த ஊரான பட்டுக்கோட்டை, ஒரத்தநாடுக்கு அருகில் உள்ள பழவங்காடு கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதி சடங்கு நடக்கிறது. சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் சென்னைக்கு வந்த திலீபன், கூத்துப்பட்டறையில் பயின்று, பிறகு படங்களில் நடிக்க தொடங்கிய அவருக்கு இரண்டு தம்பிகளும், ஒரு அக்காவும் உள்ளனர்.

Tags »
செம்பட்டை, படத்தின், நடிகர், திலீபன், காலமானார், Cemppattai, film, actor, Thileepan, passed away,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (38)

ராஜா - penang,மலேஷியா
2012-10-15 09:19:47 Report Abuse
 ராஜா அவரது குடும்பதார்க்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் ,,,உங்களது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ,,,,,,,
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
gunaa - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2012-10-15 05:50:04 Report Abuse
 gunaa உடல் அழிந்தாலும் உன் உழைப்பு என்றும் அழிவதில்லை!!!
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
SARGUNAM.T - SINGAPORE  ( Posted via: Dinamalar Android App )
2012-10-14 05:26:29 Report Abuse
SARGUNAM.T கடுமையாக உழைத்து முன்னேறி வந்த ஒரு இளைஞர் தனது இளவயதி்லேயே மரணிப்பது என்பது மிக மிக கொடுமையான ஒரு சம்பவம் நிறைய இளைஞர்கள் தன் குடும்பத்தை நேசிக்கும் அளவில் கால்வாசி பங்கு கூட தன் உடல்நலனை பற்றி சிந்தி்ப்பது இல்லை இந்த உண்மையை அனைவரும் உணர்ந்து இன்றைய இளைஞர்களை காப்பாற்ற வேண்டுகிறேன் நானும் இதேபோல எனது சகோதரனை இழந்தவன் தான் சற்குணம் சிங்கப்பூர்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
kiruthika - chennai,இந்தியா
2012-10-13 15:34:42 Report Abuse
 kiruthika அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்திகிரன்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
imman - chennai,இந்தியா
2012-10-13 15:30:44 Report Abuse
 imman ஆத்துமா சாந்தி அடையட்டும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
மேலும் 33 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in