10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் | பிரபல இயக்குனரின் வீட்டில் திருடப்பட்ட நகைகள் ஒரேநாளில் மீட்பு |
பாலிவுட் சூப்பர் ஸ்டார், அமிதாப் பச்சனுக்கு, பிறந்த நாள் பரிசாக, பிரிட்டனை சேர்ந்த தொண்டு நிறுவனம், நடமாடும் நீரிழிவு சோதனை மையத்தை அன்பளிப்பாக அளிக்கிறது. இந்தி நடிகர் அமிதாப் பச்சன், இன்று(11.10.12) 70வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, பிரிட்டன் அமைச்சர், கெய்த் வாஸ் நிறுவிய, "சில்வர் ஸ்டார் தொண்டு நிறுவனத்தின் சார்பில், நடமாடும் நீரிழிவு பரிசோதனை மையம், அன்பளிப்பாக வழங்கப்படுகிறது.
மும்பையில் உள்ள "செவன் ஹில்ஸ் மருத்துவமனையில், பிரிட்டன் தூதரிடமிருந்து, நடமாடும் நீரிழிவு சோதனை மையத்தை அமிதாப் பச்சன் பெற்றுக் கொள்வார். இதன் மூலம், லண்டன், லீசெஸ்டர், கோவா போன்ற நகரங்களுக்கு அடுத்த படியாக, மும்பையில், "நடமாடும் நீரிழிவு சோதனை மையம் செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நடமாடும் நீரிழிவு மையத்தில், ஒரு நர்ஸ், ஒரு கண் பரிசோதகர், மற்றும் ஒரு பொது மருத்துவர் இருப்பர். இவர்கள் மக்களை பரிசோதித்து, அவர்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா, இல்லையா என்பதை சொல்வர். மேலும், நீரிழிவு நோய் வராமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் அறிவுரை வழங்குவர். இந்த சேவையினை மும்பையில் செயல்படுத்தும் பொறுப்பை, "செவன் ஹில்ஸ் மருத்துவமனையே ஏற்றுக் கொண்டுள்ளது. சில்வர் ஸ்டார் தொண்டு நிறுவனத்துக்கு பல உதவிகளை செய்ததோடு, இந்தியாவில் நீரிழிவு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் அமிதாப் பச்சனை கவுரவிக்கும் வகையில் இந்த நடமாடும் நீரிழிவு சோதனை மையத்துக்கு "அமிதாப் என, பெயரிடப்பட்டுள்ளது.
இது குறித்து, கருத்து தெரிவித்த அமைச்சர், கெய்த் வாஸ், ""அமிதாப், பல உலக நாடுகளில் செய்துள்ள நல்ல காரியங்களுக்காக, இன்று அமிதாப்பின் 70வது பிறந்த நாளில் அவரை நாங்கள் கவுரவிக்கிறோம். பிரிட்டன் மக்கள், அவருக்கு ஒரு நல்ல பயனுள்ள பரிசை வழங்க விரும்பினர். இந்த நடமாடும் நீரிழிவு சோதனை மையம், மும்பையில் பரவலாக உள்ள நீரிழிவு நோயை கட்டுபடுத்த உதவியாக இருக்கும், என, கூறினார்.