தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
விஷாலுக்கு, இப்போது உடனடியாக ஒரு வெற்றி தேவைப்படுவதால், கடினமாக உழைக்கிறார். “சமர், மதகஜராஜா, எம்.ஜி.ஆர்.’ என, தமிழிலும், நேரடியாக தெலுங்கிலும் நடிப்பதால், விஷால் ஓடிக் கொண்டே இருக்கிறார். இதற்கு நடுவே, விஷால் பற்றி, காதல் கிசுகிசுக்கள் அடிக்கடி கிளம்புவதால், அவரின் குடும்பத்தினர், ரொம்பவே கவலையாக உள்ளனர். ஆகவே, உடனே விஷாலுக்கு திருமணம் செய்துவிடும் முடிவுக்கு வந்துள்ளனர். கல்யாணப் பேச்சு வரும்போதெல்லாம், பிடி கொடுக்காமலே நழுவி வந்த விஷாலை, அவரின் குடும்பத்தினர், இந்தமுறை, கிடுக்கிபிடி போடவே, வேறு வழியே இல்லாமல், சம்மதம் கொடுத்துள்ளார். இதையடுத்து, விஷாலுக்கு, தீவிரமாக பெண் பார்க்கும் படலத்தில் இறங்கியுள்ளனர் குடும்பத்தினர்.