டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
"கும்கி தான், லட்சுமிமேனனுக்கு முதல் படம். ஆனால், "சுந்தரபாண்டியன் முந்திக் கொண்டது. தற்போது, "கும்கியும் வெளியாக தயாராகி விட்டது. கேரளத்துப் பெண்ணாக இருந்தாலும், ரொம்ப அழகாக தமிழ் பேசுகிறார் லட்சுமி. தன் படங்களில், சொந்தக் குரலில் பேச வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருக்கிறது. ஆனால், பேச்சில் மலையாள வாடை அடிப்பதாகச் சொல்லி, "டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டை பேச வைக்கின்றனர் இயக்குனர்கள். இதனால், தமிழை அச்சர சுத்தமாகப் பேச, பயிற்சி எடுத்து வருகிறார் நடிகை. "கும்கி படத்தில், யானையும் ஒரு கதாபாத்திரமாகவே வருவதால், யானை உடன் நிறைய காட்சிகளில், அவர் நடிக்க வேண்டிய கட்டாயம். கேரளாவிலேயே பிறந்து வளர்ந்திருந்தாலும், லட்சுமிக்கு யானை என்றால் அலர்ஜி. ஆனால், பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் நடித்து கொடுத்துள்ளார்.