மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
"தவமாய் தவமிருந்து படத்தில், இயக்குனர் சேரனால் அறிமுகம் செய்யப்பட்டவர் மீனாள். அதன்பின், "பள்ளிக்கூடம் படத்தில் நடித்த அவர், அதைத் தொடர்ந்து, அழுத்தமான வேடங்கள் கிடைக்காமல், சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில், "அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்தில், மீனாளுக்கு, "நார்த்தங்கா என்றொரு கதாபாத்திரத்தைக் கொடுத்து, மீண்டும் அவர் மீது, வெளிச்சம் பாய்ச்சி உள்ளார் பாரதிராஜா. இதைத் தொடர்ந்து, "அம்மாவின் கைப்பேசி படத்திலும், முக்கிய வேடத்தில் அவர் நடித்துள்ளார். இதையடுத்து, தற்போது யதார்த்தமான வேடங்களுடன், பல இயக்குனர்கள், மீனாளை முற்றுகையிட்டுள்ளனர். அதனால், காலியாகவே இருந்த அவரது, "கால்ஷீட் டைரி வேகமாக நிரம்பிக் கொண்டிருக்கிறது.