Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » ஸ்பெஷல் ரிப்போர்ட் »

ஒவ்வொரு சினிமாவும் ஒவ்வொரு போராட்டம்தான்: இயக்குனர் விஜய் சிறப்பு பேட்டி

Director Vijays Special interview தடைகளை தாண்டி வந்த தாண்டவத்தால் கொஞ்சம் துவண்டுதான் போயிருக்கிறார் விஜய். ஆனாலும் அடுத்த படம் இளைய தளபதியுடன் என்பதால் கூடுதல் உற்சாகத்துடன் பணிகளை துவக்கி விட்டார். அவர் தினமலர் இணைய தளத்துக்கு அளித்த சிறப்பு பேட்டி:

* தாண்டவம் படத்துக்கு ஏன் இத்தனை தடைகள்?


அதாங்க எனக்கும் புரியல. படத்தின் முதல் ஷெட்யூலுக்கு லண்டன் போனோம். முதல் 15 நாள் மழை கொட்டித் தீர்த்தது. 30 வருடங்களுக்கு பிறகு லண்டனில் அப்படி ஒரு மழையாம். எங்களுக்கு பல லட்சம் நஷ்டம். லண்டன் ஷூட்டிங் முடிச்சிட்டு வந்தா லண்டன்ல எடுத்த சீனெல்லாம் அழிந்து விட்டது தயாரிப்பாளருக்கு பல கோடி நஷ்டம்னு டிவியில ஸ்க்ரோல் ஓடிக்கிட்டு இருக்கு. டிஜிட்டல்ல சூட் பண்ணினதால சில சீன்கள் கரெக்ட் ஆகியிருந்துச்சு. அதை சரி பண்ணிட்டோம். இதெல்லாம் சகஜமாக நடக்குறதுதான் அதன் பிறகு வந்தது டைட்டில் பிரச்னை. ஒருத்தர் நான் தாண்டவம் டைட்டிலை வச்சிருக்கேன். நீங்க வைக்ககூடாதுன்னு வந்து நின்னார். நீதிமன்றம் வரைக்கும் போய் டைட்டிலை மீட்டு வந்தோம். அடுத்து வந்தது ஸ்கிரிப்ட் பிரச்சினை. துணை இயக்குனர் பொன்னுசாமிங்றவர் தாண்டவம் கதையே என்னோடதுதான்னு வந்து நின்னார். பார்வையற்றவர் பழிவாங்குறது கதை. அவரோட கதையும் அதுதான். கதை நடப்பது வெவ்வேறு தளத்தில். அவரும் நீதிமன்றம் போனார். படம் வெளியிட தடை விதித்தார்கள். நாங்களும் நீதிமன்றம் சென்று உரிய விளக்கம் கொடுத்து தடையை நீக்கி வந்து, படத்தை வெளியிட்டோம். மழைவிட்டும் தூவானம் விடாத கதையாக இப்போதும் படத்தை பற்றிய நெகட்டிவ் தாட்கள் வர்றது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.

* துணை இயக்குனர் பொன்னுசாமி கதை என்னோடதுதான் என்ற வழக்கு நிலுவையில் உள்ளதே?

திரும்பவும் சொல்றேன், தாண்டவம் படத்தோட கதை நான் ஒரு வருஷம் கஷ்டப்பட்டு உருவாக்கின கதை. தெய்வதிருமகள் படம் ஷூட்டிங் நடந்துகிட்டிருக்குறப்பவே நான் இந்த கதைய விக்ரமுகிட்டேயும், யுடிவி தனஞ்செயன்கிட்டேயும் சொல்லியிருக்கேன். இது நடந்தது போன வருடம் ஜுன் மாதம். பொன்னுசாமி தனஞ்செயன் சார்கிட்ட கதை சொன்னது ஆகஸ்ட் மாதம். அவரும் பொன்னுசாமிகிட்ட இதே மாதிரி கதை நாங்களும் பண்ணப்போறோம்னு சொல்லியிருக்கார். உடனே அவர் நம்ம கதையத்தான் பண்ணப்போறாங்களோன்னு சந்தேகப்பட்டுட்டார். அவரது சந்தேகம் நியாமானது. அதனாலதான் படம் முடிந்ததும் அவருக்கும், இயக்குனர் சங்கத்துக்கும் போட்டுக் காட்டினேன். அதிலும் திருப்தி படமாமல் அவர் நீதிமன்றத்துக்கு போயிருக்கிறார். அவர் கதைக்கும், தாண்டவம் கதைக்கும் சம்பந்தமே இல்லைன்னு வரிக்கு வரி ஸ்டேட்மெண்ட் தயார் பண்ணிவச்சிருக்கேன். தாண்டவம் என்னோட கதைதான்னு எந்த இடத்துலேயும் புரூப் பண்ணுவேன். அதுக்காக கடைசி வரைக்கும் போராடுவேன்.

* பொன்னுசாமியின் கதையில் உள்ள 42 காட்சிகள் தாண்டபம் படத்தில் இருக்கிறதாமே?


ஒரு க்ரைம் கதையென்றால் அதில் போலீஸ் அதிகாரி ஒருவர் இருப்பார், பார்வையற்றவர் பழிவாங்குகிறார் என்றால் அவர் தனி சக்தி படைத்தவராக இருப்பார் இதெல்லாம் பொதுவானது இதையெல்லாம் காப்பி என்று சொன்னால் என்ன செய்ய முடியும். பொன்னுசாமியின் முழு கதையும் எனக்குத் தெரியும். அதை வெளியில் சொன்னால் அவர் கதையும் என் கதையும் வேறு என்பது வெளிப்படையாகத் தெரியும். ஆனால் அவர் அதை படமாக எடுக்கும் முயற்சியில் இருப்பதால் என்னால் சொல்ல முடியவில்லை.

* பொன்னுசாமிக்கு 5 லட்சம் பணம் கொடுத்து செட்டில் பண்ணிட்டீங்களாமே?


கதை என்னோடதுதான்னு நான் சொல்லும்போது எதுக்காக நான் அவருக்கு பணம் தர வேண்டும். இதுவரை ஒரு பைசாக்கூட அவருக்கு நான் கொடுக்கவில்லை. கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. அவரும் கேட்கவில்லை. அவருக்கு என்னை மிரட்ட வேண்டும் என்பதோ, என்னிடம் பணம் பறிக்க வேண்டும் என்பதோ நோக்கமே இல்லை. அவர் உண்மையிலேயே நல்ல திறமைசாலி. எனது வருத்தமெல்லாம் இத்தனைக்குப் பிறகும் அவர் என்னை புரிந்து கொள்ளவில்லையே என்பதுதான். அவருடைய கதையும் நல்ல கதைதான் அதை அவர் எடுத்தால் நிச்சயம் வெற்றி பெறுவார். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

* உங்கள் படங்கள் எல்லாம் பிரச்சினைகளை சந்திக்கிறதே?

ஒரு இயக்குனருக்கு ஒவ்வொரு படமும் போராட்டம்தான். நான் சின்ன வயதில் பெரிய படங்களை எடுக்கிறேன். அது சிலருக்கு பிடிக்கவில்லை. அவர்களால் முடிந்ததை செய்கிறார்கள். போராடி ஜெயிக்கிறேன். நான் படம் எடுக்க வந்திருக்கிறேன். அதை தவிர வேறெதுவும் எனக்குத் தெரியாது.

* அடுத்த படம்?


ஏற்கெனவே திட்டமிட்டது மாதிரி விஜய் படம் இயக்குகிறேன். லவ், செண்டிமெண்ட் கலந்த ஆக்ஷன் கதை, எனக்கு திருப்புமுனை தரும் படமாக இருக்கும். புது விஜய்யை ரசிகர்கள் பார்ப்பார்கள். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார், ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். பாடல் கம்போசிங் நடந்து வருகிறது. ஷூட்டிங்கும், ஹீரோயினும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

* ஹீரோயின் அமலா பால் என்றும், தலைப்பு தலைவன் என்றும் பேச்சு இருக்கிறதே?

பாருங்க பாஸ்... இந்தப் படத்துக்கும் இப்போதே பிரச்னையை ஸ்டார்ட் பண்றீங்க. ப்ளீஸ் என்னை விட்டுருங்களேன்...

கைகூப்பி கரம்கொடுத்து வழி அனுப்பி வைக்கிறார் விஜய்.

Tags »
Director Vijays, Special interview, இயக்குனர் விஜய், சிறப்பு பேட்டி,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (3)

Jeeva - Chennai  ( Posted via: Dinamalar Android App )
2012-10-07 20:40:52 Report Abuse
Jeeva இது Daredevil காப்பி
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
அரவிந்த் - kovai,இந்தியா
2012-10-07 17:43:03 Report Abuse
 அரவிந்த் விஜய்..முன்பே பிறமொழிகளில் எடுகப்பட்ட படங்களை நீங்கள் தமிழில் இயக்கி பெருமை படகூடாது...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
சுப்ரஜா - Bangalore,இந்தியா
2012-10-07 16:46:26 Report Abuse
சுப்ரஜா அவர் கதைதான் என்றால் ஏன் போட்டு காட்ட வேண்டும்..தனஞ்செயன் போன்னுச்வாமி தன்னிடம் கதை சொன்ன பொது இதே போன்று ஒரு கதையை ஏற்கனவே ஒருவர் ( விஜய் ) சொல்லியிருக்கிறார் என்று தடுத்து இருக்கலாமே...அடிப்படை கதை ஒன் லைன் ஓன்று தானே? வழக்கு நிலுவையில் இருக்கும் பொது வரிந்து காட்டிக் கொண்டு பெட்டி எதுக்கு? தினமலர் இது போன்ற பேட்டிகளை வெளியிடும் போது ஒரு முறைக்கு இரு முறை சிந்திக்க வேண்டும்... உண்மை இறைவனுக்கு தெரியும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

மேலும் ஸ்பெஷல் ரிப்போர்ட்

Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in