'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கே.பாக்யராஜ் இயக்கிய, "சித்து +2 படத்தில் அறிமுகமான சாந்தினி, அதைத் தொடர்ந்து, நடிகர் ஆர்யா தயாரித்த, "படித்துறை படத்தில் நடித்தார். ஆனால், அந்தப் படம் இன்னும் திரைக்கு வரவில்லை. அதனால், அதற்காக காத்திருக்காமல், நகுல் நடிக்கும், "நான் ராஜாவாகப் போறேன் என்ற படத்தில், தற்போது நடித்து வருகிறார். படத்தில், கல்லூரி மாணவியாக நடிக்கும் அவர், எதிரிகளுடன் நகுல் மோதும் சண்டைக் காட்சிகளிலும், உடன் நடித்துள்ளார். அதில், ஒரு சண்டைக் காட்சியை, கொட்டும் மழையில் படமாக்கி உள்ளனர். அதில், சாந்தினியை, வில்லன்களிடமிருந்து நகுல் காப்பாற்றுவது போன்ற காட்சியில், பலமுறை கீழே விழுந்து, தத்ரூபமாக அமைய வேண்டும் என்பதற்காக, ரத்தக் காயங்களுடன் நடித்துள்ளார் சாந்தினி.