அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
"மங்காத்தாவை அடுத்து வெங்கட்பிரபு இயக்கும், "பிரியாணி படத்தில், கார்த்திக்கு ஜோடியாக, ரிச்சாவைத் தான் ஒப்பந்தம் செய்துள்ளனர். இருப்பினும், "அலெக்ஸ் பாண்டியன் படத்தைத் தொடர்ந்து, மீண்டும் கார்த்திக் நடிக்கும் படத்தில், அனுஷ்கா நடிப்பதாக வெளியான செய்தியை அடுத்து, அலறிவிட்டார் ரிச்சா. ஏற்கனவே, தமிழில் நடித்த, "மயக்கம் என்ன, ஒஸ்தி ஆகிய படங்கள் தோல்வி அடைந்து, தன் மீது, ராசி இல்லாத நடிகை என்ற முத்திரை விழுந்திருப்பதால் தான், இப்படி நடந்து விட்டதோ என, பலவிதமான யூகங்களுடன், உடனடியாக வெங்கட்பிரபுவை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார் ரிச்சா. அப்போது, "பிரியாணி பட நாயகி ரிச்சா தான்; வதந்திகளை நம்ப வேண்டாம் என, அவர் உறுதிபட சொன்ன பிறகு தான், நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளார் ரிச்சா.