ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நகுல் - சாந்தினி ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம், "நான் ராஜாவாகப் போகிறேன் இயக்குனர் வெற்றிமாறன் வசனம் எழுத, அறிமுக இயக்குனர் ப்ரித்வி ராஜ்குமார், படத்தை இயக்குகிறார். இதில், "பாலிவுட் நாயகி ஷெரின் கான், ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறார். படப்பிடிப்பிற்காக சென்னை வந்துள்ள ஷெரின் கானிடம், "குத்துப் பாட்டுக்கு ஆடுவதேன் எனக் கேட்டபோது, "சல்மான்கானின், "வீர் படம் மூலம், இந்திப் பட உலகில் நுழைந்தேன். பிறகு, "ரெடி, ஹவுஸ்புல் ஆகிய படங்களில் நடித்தேன். தமிழ் சினிமாவில் இருந்து அழைப்பு வரவே, "கரிகாலன் படத்தில், விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆனேன். ஆனால், அந்தப் படம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே, "நான் ராஜாவாகப் போகிறேன் படத்தில், குத்துப் பாட்டுக்கு ஆட அழைப்பு வந்தது. குத்துப் பாட்டுக்கு ஆட சம்மதித்தாலும், இங்குள்ள முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடிக்க விரும்புகிறேன். தமிழ் ரசிகர்கள், நிச்சயம் என்னை ஏற்றுக் கொள்வர் என்கிறார், ஷெரின் கான்.