பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தமிழில், அடக்க ஒடுக்கமான கதாநாயகியாக வலம் வந்த சார்மி இங்கு ஒரு ரவுண்ட் வந்து, தெலுங்கு தேசத்திற்கு போனார். அங்கு போனதும், ஆவேச நாயகியாக அவதாரம் எடுத்துள்ளார். அவரின் ஆவேசமான நடிப்பில் தயாராகி உள்ள படம் "சிவாங்கி. மேக்ஸ் லைட்ஸ் சினிமா சார்பில், நாகேஷ்வரராவ் ரெட்டி தயாரித்துள்ள இப்படம், தெலுங்கில் சக்கை போடு போட்டது. அந்தப்படம் இப்போது தமிழ் பேச உள்ளது. இதன் தமிழ் வசனங்களை, ஏ.ஆர்.கே. ராஜராஜா எழுதியுள்ளார். ஓஷோ துளசி ராம் இயக்கியுள்ளார். "அருந்ததீ, "காஞ்சனா போன்ற படங்களின் வரிசையில், திரில்லர் திரைப்படமாக தயாராகி உள்ள இப்படத்தில், நடிகை சார்மி கதாநாயகனுக்கு இணையான கதாப்பாத்திரத்தில் தோன்றி மிரட்டுகிறார். இதுவரை, தன்னிடம் கிளாமரை மட்டுமே எதிர்பார்த்த ரசிகர்கள், இந்த முறை, தனது இந்த ஆக்ரோஷமான நடிப்பை ஏற்றுக் கொள்வார்கள் என்கிற நம்பிக்கை சார்மியிடம் படர்ந்துள்ளது. அவரின் ஆவேசமான நடிப்புக்கு நடுவே, பாடல் காட்சிகளில் கவர்ச்சியிலும் கிறங்க வைத்துள்ளாராம். இது ஒரு பழி தீர்க்கும் திரில்லர் திரைப்படம் என்பதால், சிவாங்கி படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.