பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |
பிரபல மலையாள நடிகை ஸ்வேதா மேனனின் பிரசவத்தை, சினிமாவுக்காக நேரடியாக படம் பிடித்து, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் மலையாள இயக்குனர் பிளஸ்சி.மலையாள திரையுலகின் பிரபல நடிகை ஸ்வேதாமேனன்,38. சமீபத்தில் வெளியான, "ரதி நிர்வேதம் என்ற சினிமாவில், படு கவர்ச்சியாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஸ்ரீவல்சன் என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்ட ஸ்வேதா மேனன் கர்ப்பமானார். சில நாட்கள் முன், மலையாள இயக்குனர் பிளஸ்சி, ஸ்வேதா மேனனை சந்தித்து, தான், "களிமண் என்ற படத்தை இயக்கப்போவதாகவும், அதில் ஒரு பெண் திருமணமாகி, கருவுற்ற காலம் முதல், பிரசவமாகும் வரை உள்ள காட்சிகளை, யதார்த்தமாக படம் பிடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதற்காக, ஒரு கருவுற்ற பெண்ணை தேடிக் கொண்டிருப்பதாக தெரிவித்த பிளஸ்சி, ஸ்வேதா மேனனை இந்த வேடத்தில் நடிக்க விரும்பமா? என, கேட்டுள்ளார். அதற்கு ஸ்வேதா மேனனும், அவரின் கணவரும் சம்மதித்தனர். இதையடுத்து, பிளஸ்சி உடனடியாக படப்பிடிப்பை துவங்கினார். ஒரு பெண்ணுக்கு, கற்ப காலத்தில் நடக்கும், எல்லா சம்பிரதாய சடங்குகளும், இயல்பாகவே படமாக்கப்பட்டன. இந்நிலையில், ஸ்வேதாமேனன் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில், பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார்.
அவரது பிரசவத்துக்காக, தனிஅறை தயாரானது. அங்கு மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டன. நேற்று முன்தினம், மாலை, 5:00 மணிக்கு ஸ்வேதா மேனனுக்கு பிரசவ வலி எடுத்தது; உடனே, மருத்துவர்கள் சிகிச்சைக்காக தயாரானார்கள். அதேநேரம், இயக்குனர் பிளஸ்சி, ஒளிப்பதிவாளர் ஜேக்கப், உதவி கேமராமேன் பாலு ஆகியோர், பிரசவத்தை நேரடியாக படம் பிடிக்க ஆயத்தமானார்கள். அரை மணி நேர சிகிச்சைக்குப் பின், மாலை 5:30 மணிக்கு, சுகப்பிரசவத்தில், அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார் ஸ்வேதா மேனன். ஸ்வேதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், குழந்தை பிரசவமானது வரை, அனைத்து காட்சிகளையும் நேரடியாக, படப்பிடிப்பு குழுவினர் படம் பிடித்துள்ளனர். இதுகுறித்து, நடிகை ஸ்வேதா மேனன் கூறியதாவது: பிரசவ காலம் என்பது, பெண்களுக்கு சுகமான காலம். இதில், பெண்களுக்கு மட்டுமல்லாது, பெரும் பங்கு, ஆண்களுக்கும் இருக்கிறது. இதை எல்லாரும் உணர வேண்டும் என்பதற்காகவே, பிரசவ காட்சிகளை படமாக்க சம்மதித்தேன். இந்த படத்தில் நடித்தது மனதுக்கு மிகவும் திருப்தியாக உள்ளது. இவ்வாறு ஸ்வேதா மேனன் தெரிவித்தார்.