ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கில் தமன்னா நாயகியாக நடித்த ரிபெல் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படம் தற்போது தமிழுக்கும் டப்பாகி வருகிறது. இந்த சேதியறிந்த தமன்னா அதிக உற்சாகததில் இருக்கிறார். வேங்கை படத்துக்குப்பிறகு தனக்கு தமிழில் படமே இல்லாததால் ரசிகர்கள் மறந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் இருந்த தமன்னா இந்த படத்தில் திடீர் மொழி மாற்றம் காரணமாக சற்றே நம்பிக்கையுடன் இருக்கிறார்.
மேலும் தற்போது ஹிம்மத்வாலா படத்தின் மூலம் இந்திக்கு சென்றிருக்கும் தமன்னாவுக்கு இந்தி சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்ற நம்பிக்கை ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் நம்மால் இந்தியில் தாக்கு பிடிக்க முடியுமா? என்ற பயமும் உள்ளூர இருக்கிறதாம். அதனால் தென்னிந்திய சினிமாவில் இருந்து முற்றிலுமாக வெளியேறக்கூடாது என்று முடிவெடுத்து சில புதிய பட வாய்ப்புகளுக்கான முயற்சிகளையும் முடுக்கி விட்டு வருகிறார்.