Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

புதிய களத்தோடு ஹீரோவாக களம் இறங்கும் சுப்ரமணியம் சிவா!

23 செப், 2012 - 10:52 IST
எழுத்தின் அளவு:

 திரும்பிய பக்கம் எல்லாம் திருடா திருடி எனும் வெற்றி படத்தை கொண்டாடியவர் டைரக்டர் சுப்ரமணியம் சிவா. தனுஷ்க்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து அவரை தமிழ் சினிமா சிவப்பு கம்பளம் கொடுத்து வரவேற்க வைத்தவர். இந்தபடத்திற்கு பிறகு தனுஷூம், சுப்ரமணிய சிவாவும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கலைஞர்கள் ஆனார்கள். திருடா திருடி படத்திற்கு ‌பிறகு ஜீவாவை வைத்து பொறி எனும் படத்தை எடுத்தார். படம் சுமார் என்றாலும் படத்தில் ஒரு நல்ல கருத்தை தெரிவித்து இருந்தார். இந்தபடத்திற்கு பிறகு மீண்டும் தனுஷை வைத்து சீடன் எனும் படத்தை இயக்கினார். ஒருசிறிய இடைவெளிக்கு பிறகு இப்போது உலோகம் என்ற படத்தை இயக்கி வருகிறார். நான் கடவுள், அங்காடித்தெரு படங்களின் வசனம் எழுதிய எழுத்தாளர் ஜெயமோகனின் உலோகம் நாவலை மையப்படுத்தி இந்த கதையை இயக்கி வருகிறார் சிவா.

இந்தபடத்தில் அவர் எடுத்துள்ள கதைக்களம் இலங்கை தமிழ் மக்களின் வாழ்வியலை பற்றியது. இதுவரை இயக்குநராக மட்டுமே இருந்து வந்த சிவா இப்படத்தில் இயக்குநர் பொறுப்புடன் ஹீரோ பொறுப்பையும் ஏற்றுள்ளார். உலோகத்திற்காக தன்னை வருத்தி கெட்-அப் எல்லாம் மாற்றம் செய்து, உடல் எடையை குறைத்து நடித்துள்ளார். கடலூர், சிதம்பரம், பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் 70 சதவீத படத்தை முடித்துவிட்டார் சிவா. உலோகம் படத்தில் சிவா தவிர இந்தப்படத்தில் நடித்த அனைவருமே புதுமுகங்கள் தான். இதுவரை தான் இயக்கிய படங்களை காட்டிலும் உலோகம் படம் ரசிகர்களிடத்தில் ஒரு புதிய அடையாளத்தை ‌தனக்கு ஏற்படுத்தி கொடுக்கும் என நம்புகிறார் சிவா. மேலும் தற்போது கடல், நீர்ப்பறவை போன்ற படங்களுக்கு வசனம் எழுதி வரும் எழுத்தாளர் ஜெயமோகனும் தனது உலோகம் கதை எப்படி திரையில் வர போகிறது என்ற மிகுந்த ஆர்வத்தில் இருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

27 செப், 2012 - 20:41 Report Abuse
 மருத்துவர் லெ. பூபதி. படம் வெற்றி பெற ஆர்வத்துடன் வாழ்த்துகிறேன்.
Rate this:
k - singapore,சிங்கப்பூர்
25 செப், 2012 - 09:16 Report Abuse
 k remba nalla subject. noone from TN watch this film except thol.theruma(not thiruma streetma)
Rate this:
Subbu - Bangalore,இந்தியா
24 செப், 2012 - 01:07 Report Abuse
 Subbu வாழ்த்துக்கள்
Rate this:
ram - chennai  ( Posted via: Dinamalar Android App )
23 செப், 2012 - 12:09 Report Abuse
ram siva neengaluma? naanga nalla irukkurathu podikkalaya?ketta kathaiyin naayagannu solli enga engala kollurenga?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in