Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தாண்டவம் கதை விவகாரம்! இயக்குனர்கள் சங்கம் விசாரணை!!

23 செப், 2012 - 10:12 IST
எழுத்தின் அளவு:

தாண்டவம் படத்தின் கதை குறித்த பிரச்னையில் இயக்குனர்கள் சங்கம் விசாரணையை தொடங்கியுள்ளது. விக்ரம், அனுஷ்கா நடித்த தாண்டவம் படம் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்ககிறது. செப்டம்பர் வெளியீடு என்று தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.  இந்நிலையில் தாண்டவம் படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் பொன்னுசாமி உரிமை கொண்டாடுகிறார். இயக்குனர் சங்கத்திலும் புகார் செய்துள்ளார். இவர் ராதாமோகனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இயக்குனர் சங்கத்தில் பொன்னுசாமி அளித்த புகாரில் கடந்த 2011ல் படத்தின் தயாரிப்பாளரை அணுகி தாண்டவம் படத்தின் கதையை சொன்னேன். அதை படமாக்கலாம் என்றனர். பிறகு என்னுடன் ஆலோசிக்காமல் இயக்குனர் விஜய்யை வைத்து படத்தை எடுத்துவிட்டனர் என்று கூறியுள்ளார்.

இந்த பிரச்னை குறித்து இயக்குனர் சங்கம் விசாரணை நடத்தி வருகிறது. இன்னும் தீர்வு ஏற்படவில்லை. தயாரிப்பு தரப்பில் கேட்டபோது பொன்னுசாமி கடந்த வருடம் கதை சொன்னார். நாங்கள் பார்வையற்றவர் கதையொன்றை படமாக்குவதாக சொல்லி அதை திருப்பி கொடுத்துவிட்டோம் என்றார். இயக்குனர் விஜய் கூறும்போது தாண்டவம் படம் உதவி இயக்குனர் பொன்னுசாமிக்கும் இயக்குனர் சங்கத்துக்கும் திரையிட்டு காட்டப்பட்டது. பட வேலைகளை தொடர்ந்து செய்யும்படி இயக்குனர் சங்கம் என்னிடம் கூறி உள்ளது என்றார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Jeeva - Chennai  ( Posted via: Dinamalar Android App )
24 செப், 2012 - 02:39 Report Abuse
Jeeva Thaandavam based on Daredevil movie.
Rate this:
Neelaa - Atlanta,யூ.எஸ்.ஏ
24 செப், 2012 - 00:11 Report Abuse
Neelaa எனக்கு என்னவோ இந்த பொன்னுசாமி பக்கம் தான் உண்மை இருக்கிறது என்று தோன்றுகிறது! இயக்குனர் விஜய் சொந்த சரக்கை எப்போதுமே தந்ததில்லை! எல்லாமே திருட்டு தான். காபிரைட் வழக்கு போட்டு உள்ளே தள்ளி, அபராதமும் கட்ட வைத்தால் தான் இவர் போல பல இயக்குனர், தயாரிப்பாளர்கள் திருந்துவார்கள்! ஹிந்திப்பட உரிமையை விற்கும் போது, தமிழ் தயாரிப்பாளர்கள் கதாசிரியரின் பெயரை ரீமேக்கில் போடவேண்டும் என்று ஏன் கண்டிஷன் போடுவதில்லை? வசனத்தை மொழிபெயர்ப்பவன் எல்லாம், "Written By" என்று போட்டுக்கொள்கிறான்! இதை கேட்க ஒருத்தனும் இல்லையா?
Rate this:
Soso - Chennai,இந்தியா
23 செப், 2012 - 12:05 Report Abuse
 Soso இந்த ஆளு எப்பவுமே காபி.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in