தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆச்சரியங்கள் படத்தில் நடித்த தமன்குமார் நாயகனாக நடித்து வரும் படம் சட்டம் ஒரு இருட்டறை. இதன் படப்பிடிப்பு தற்போது ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது. இப்படத்துக்கான ஒரு சண்டை காட்சியில் பட நாயகிகளான பியா, பிந்து மாதவி இருவரும் ஹெலிகாப்டரில் தொங்குவது போலவும், உள்ளே எதிரிகளுடன் தமன்குமார் ஆவேச சண்டை செய்வது போலவும் ஒரு காட்சியை படமாக்கியுள்ளார் இயக்குனர் சினேகா பிரிட்டோ.
ஆனால் ஒரு கட்டத்தில் தொங்கிக்கொண்டிருந்த பியா, பிந்து மாதவி இருவரும் திடீரென்று கை தவறி கீழே விழுந்து விட்டார்களாம். நல்ல வேளையாக அவர்களுக்கு கீழே வலை இருந்ததால் அதில் விழுந்து தப்பித்திருக்கிறார்கள். இருப்பினும் கீழே விழுந்த வேகத்தில் இருவரும் பலத்த அதிர்ச்சியடைந்து விட்டார்களாம். அதனால் அன்று முழுக்க அவர்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு வேறு காட்சிகளை படாக்கியிருக்கிறார் இயக்குனர்.