ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் |
ஹரி இயக்கிய, "தாமிரபரணி படத்தில், விஷாலுக்கு ஜோடியாக நடித்தவர் பானு. ஆனால், அதற்கு பிறகு அவருக்கு, தமிழில் சரியான வாய்ப்புகள் அமையாததால், தன் தாய்மொழியான மலையாள படங்களில் நடித்து வந்தவரை, "அழகர்மலை, சட்டப்படி குற்றம் படங்களுக்காக, மீண்டும் கோலிவுட் அழைத்து வந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக இப்போது, வசந்த் இயக்கும், "மூன்று பேர் மூன்று காதல் படத்திலும், மூன்று நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார் பானு. "இது மிகவும் வித்தியாசமான வேடம் என்பதால், இந்தப் படத்திற்குப் பிறகு, கோலிவுட்டில், நீயும் ஒரு பிரதான நடிகையாகி விடுவாய் என, பானுவுக்கு நம்பிக்கை ஊட்டியுள்ளார் வசந்த்.
அவர் சொன்னது பலித்து விட்டால், மலையாள படங்களை தவிர்த்துவிட்டு, முழுநேர தமிழ் நடிகையாகி விடுவதாக சொல்கிறார் பானு.