பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார் | உறவுக்காரருக்காக மாணவியை கடத்த சனாகான் முயற்சி; போலீஸ் வழக்கு பதிவு: சனாகான் தலைமறைவு | கமல் படத்துக்கு இசை! யுவன்ஷங்கரின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது! | பகலவனில் விஜய்க்கு பதில் ஜெயம் ரவி நடிக்கிறார் | சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! |
தெலுங்கில் லீடர் படத்தின் மூலம் அறிமுகமானவர் ராணா. ராமாநாயுடுவின் பேரனான இவர் தற்போது வேகமாக வளர்ந்து வரும் ஹீரோ. இந்த நேரத்தில் இவரும், த்ரிஷாவும் காதலித்து வருவதாக பரவியுள்ள செய்தியால், ராணாவின் குடும்பத்தார் பலத்த அதிர்ச்சியடைந்துள்ளனர். அதனால் அவர்களை பிரிக்கும் முயற்சிகளில் தீவிரமடைந்திருக்கிறார்கள்.
முன்பெல்லாம் ஐதராபாத் செல்லும்போதெல்லாம் ராணாவின் ஹெஸ்ட் ஹவுசில்தான் தங்குவார் த்ரிஷா. அப்படியே அவர்கள் ஜாலியாக ஊர் சுற்றுவதும் உண்டு. ஆனால் முதலில் அதை கண்டுகொள்ளாமல் இருந்தவர்கள், இப்போது காதல் கீதல் என்று செய்தி பரவியதால் உஷாராகி விட்டனர். எக்காரணம் கொண்டும் த்ரிஷாவுடன் பழகக்கூடாது, நடிக்கக்கூடாது என்றும் கூறி வருகிறார்களாம். அதோடு, த்ரிஷாவுக்கும் போன் போட்டு இனி ராணாவுடன் பேசவோ, பழகவோ கூடாது என்று எச்சரித்திருக்கிறார்களாம்.