ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
பாலிவுட் ரசிகர்களின் லேட்டஸ்ட் செல்லம், சோனாக்ஷி சின்காவுக்கு, பேசக் கூட நேரமில்லை. "ரவுடி ரத்தோர், ஜோக்கர் போன்ற படங்களில் இவரது நடிப்பு, பெரிதும் பேசப்பட்டதால், மேடத்தின் கால்ஷீட் டைரி, ஹவுஸ் புல்லாகி விட்டது. பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தவரை நிறுத்தி,"திருமணம் எப்போது என, கேட்டால், முறைத்து பார்க்கிறார். " இப்போது தான், பிசியான நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ளேன். அதற்குள், திருமணம், வாழ்க்கை துணை என்றெல்லாம் கூறி, ஏன் பீதியை கிளப்புகிறீர்கள். இருந்தாலும் சொல்கிறேன். என்னுடைய திருமணம், ரொம்பவும் எளிமையாக நடக்க வேண்டும். ஏதாவது ஒரு கடற்கரையில் நடத்த வேண்டும். அலை கடல் ஓசையின் தாலாட்டில், வெண்ணிற மணல் பரப்பில், திருமணத்தை நடத்த வேண்டும் என்பது, என் நீண்ட நாள் கனவு என, கண்களை அகல விரித்து, கற்பனையில் மிதந்தபடி, பதில் அளிக்கிறார், சோனாக்ஷி.